பிக் பாஸுக்கு இடையில் பிக் பிளான் போட்ட கமல்.. இன்றே முக்கிய முடிவை எடுக்கும் மக்கள் நீதி மய்யம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய இன்று கமல்ஹாசன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய இன்று கமல்ஹாசன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இரண்டிலும் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றிபெறவில்லை.

ஆனாலும் அதிக வாக்குகளை பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அசத்தினார். அதேபோல் அவர்களின் வாக்கு வங்கியும் மெச்சக்கூடிய அளவிலேயே இருந்தது.

இப்போது

இப்போது

ஆனால் இந்த மக்களவை தேர்தல் ரிசல்ட் பெரிய அளவில் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு சந்தோசம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆம், நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தது ஒரு இடத்திலாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அது நடக்கவில்லை.

பிக்பாஸ்

பிக்பாஸ்

அதேபோல் தேர்தலுக்கு பின் கமல்ஹாசன் அப்படியே சைலன்ட் மோடிற்கு சென்றார். அதிலும் பிக்பாஸ் சென்ற பின் முழுக்க முழுக்க அரசியல் பக்கம் தலை காட்டாமல் இருந்தார். இது அவரின் தொண்டர்களுக்கு இடையில் பெரிய அதிர்ச்சியை அளித்தது. ஆனால் அவர் பிக்பாஸுக்கு இடையிலும் நிறைய திட்டங்களை பின்பக்கம் செய்து வந்திருக்கிறார்.

 என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

தமிழகம் முழுக்க கட்சியை வலுப்படுத்த ஏதுவாக கடந்த ஒரு வாரமாக கமல்ஹாசன் தலைமையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், கட்சியில் சேராத முக்கிய தலைகள் உடன் கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசனை நடத்தி உள்ளார். இதன் மூலம் கட்சியை விரிவுபடுத்த முடிவு செய்து உள்ளனர்.

என்ன முடிவு

என்ன முடிவு

அதன்படி திமுக பாணியில் பல்வேறு மாவட்டங்களாக கட்சியை பிரித்து, நிர்வாகத்தை ஒப்படைக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். 40+ மாவட்டங்களாக கட்சியை பிரிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க முடியும் என்று கமல்ஹாசன் முடிவெடுத்து இருக்கிறார்.

இன்று மீட்டிங்

இன்று மீட்டிங்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய இன்று கமல்ஹாசன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சந்திப்பிற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+