சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெட் வேகத்தில் மக்கள் நீதி மய்யம்.. அதி வேகமாக தேர்தலுக்குத் தயாராகும் கமல்

Google Oneindia Tamil News

சென்னை: கட்சியை பலப்படுத்தும் விதமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை மக்கள் நீதி மய்யம் நியமனம் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைந்த பிறகு கமல்ஹாசன் தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

கமல்

கமல்

அன்றிலிருந்து அவரது செயல்பாடுகள் வேகம் எடுத்து வருகின்றன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் பிளஸ் இருந்தால் வரவேற்பதையும் மைனஸ் இருந்தால் விமர்சனம் செய்வதையும் கமல் பின்பற்றி வருகிறார்.

மக்களுக்கு

மக்களுக்கு

தேர்தல் தொடங்கும் முன்னே பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கஜா புயல் பாதித்த இடங்களை இருமுறை சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

போட்டியிடும்

போட்டியிடும்

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகின்றன. அது போல் மக்கள் நீதி மய்யமும் தேர்தலில் போட்டியிடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு கமல் கட்சி தயாராகி வருகிறது.

575 நியமனம்

575 நியமனம்

அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் அடுத்த கட்ட நகர்வாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் 575- க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட போவதாக கூறப்படுகிறது.

English summary
As the next step in expanding the party structure, Makkal Needhi Maiam party has appointed more than 575 ‘MNM Assembly Constituency In-charges’ with party President Kamal Haasan’s approval to work across the 234 constituencies of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X