கட்சிக்காரர்களுக்கு கமகமக்கும் அசைவ விருந்து! கமல்ஹாசன் விடுத்த அழைப்பு! பின்னணி என்ன?
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் அறுசுவை அசைவ விருந்து கொடுக்கவுள்ளார்.
இதற்கான அழைப்பை கடிதம் வாயிலாக விடுத்துள்ள அவர், தாம் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் அவசியம் பங்கேற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினருக்கு அறிவுறித்தியுள்ளார்.
கமல்ஹாசன் தரவுள்ள விருந்தில் சிக்கன், மட்டன், மீன், என அசைவ உணவு வகைகளில் உள்ள அனைத்தும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாரத் ஜோடோ யாத்திரை
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவரது அழைப்பை ஏற்று டெல்லியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டது தேசியளவில் ஹிட் ஆகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ராகுல் காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் கமல், தனது அழைப்பை ஏற்று தன்னுடன் யாத்திரையில் பங்கேற்க டெல்லிக்கு வந்த தனது கட்சி நிர்வாகிகளை கவுரவிக்க திட்டமிட்ட கமல் அவர்களுக்கு விருந்து கொடுக்க விரும்பியுள்ளார்.

கமல் கடிதம்
இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''பாரத் ஜோடோ யாத்திரைக்கான அழைப்பில் இருந்த அவசரத்தையும், அவசியத்தையும் புரிந்துகொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெரும் முயற்சி எடுத்து என்னுடன் கலந்துகொண்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு நம்மை நினைவில் வைத்திருக்கும். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.''

6ஆம் தேதி விருந்து
''வருகிற ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நான் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.'' என கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விருந்தில் சைவம், அசைவம் என இரண்டு மெனுக்கள் தயார் செய்யப்படுகின்றன. சிக்கன், மட்டன், மீன், என அசைவ உணவு வகைகளில் உள்ள அனைத்தும் கமல்ஹாசன் தரும் விருந்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியினர் ஆர்வம்
இதனிடையே கமல்ஹாசன் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த விருந்தின் போது நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பயணம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications