எல்லாமே கபட நாடகம்.. நிச்சயம் தொங்கு சட்டசபை அமையும்.. மக்கள் நீதி மய்யம்
சென்னை: கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திணிப்புகளே என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகளே. இதற்கு முன் வெளியான கணிப்புகள் அனைத்தும் தவறானவை என்பதை நாம் அறிவோம்.
திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளை மட்டுமே மாபெரும் சக்திகளாக கட்டமைக்கின்றனர். மகுடிக்கு கட்டுப்பட்டு ஆடும் பாம்பை போல இரு கழகங்கள் வாரி வழங்கும் பணத்திற்கு கட்டுப்பட்டு நடத்தப்படும் கபட நாடகம்.

அதிர்வலைகள்
இதில் பல நிறுவனங்களின் சதித் திட்டமும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நடுநிலை ஊடகங்கள் கூட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கு முக்கியத்துவம் தரவில்லை. இந்த முறை தொங்கு சட்டசபைதான் அமையும். 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவோம்.

தமிழகம்
இரு கழகங்களின் அஸ்தமனத்திற்கு முடிவுரை எழுதி, தமிழகத்தில் சிறப்பான மாற்றம் காண மக்கள் நீதி மய்யம் கூட்டணி அதற்கான முன்னெடுப்பை நிகழ்த்தும் என மக்கள் நீதி மய்ய கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம்.

வாக்குறுதி
கமல்ஹாசன் தொடங்கிய இந்த கட்சி நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி சட்டசபைத் தேர்தலிலும் மக்களுடன் மக்களாக இணைந்து குறைகளை கேட்டறிந்தன. அது போல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பொருளாதாரத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன.

முந்தைய கருத்துக் கணிப்பு
இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் திமுகவே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளை அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பொய் என கூறி வருகின்றனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications