மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : நோயாளியின் வீடு தேடி போய் மருந்து பெட்டகத்தை வழங்கிய முதல்வர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது மருந்து பெட்டகத்தை பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு முதல்வர் முக ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அருகே உள்ள சித்தலபாக்கம் ஊராட்சியில் நேரடியாக வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை அளித்து நோய் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் ,நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை செய்வதில் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளின் பரிந்துரை போன்றவை இந்த சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அருகே உள்ள சித்தலபாக்கம் ஊராட்சியில் இன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயணிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

108 அவசரகால ஊர்திகளின் சேவைகளையும் அவர் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் பயனடைந்த 20 ஆயிரம் பயனாளிகளின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications