பிரபல நடிகை லலிதா காலமானார்.. "காதலுக்கு மரியாதை" தந்த மகேஸ்வரி அம்மா.. கண்ணீரில் திரையுலகம்
நடிகை லலிதா உடல்நலக்குறைவால் காலமானார்
சென்னை: பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகை கேபிஏசி லலிதா காலமானார்.. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
ஆலப்புழாவில் உள்ள நாடக கூட்டான இடதுசாரி கேரள மக்கள் கலைக் கழகத்தில் (கேபிஏசி) தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை லலிதா.
1969ம் ஆண்டு கே.எஸ். சேது மாதவனின் கூட்டுக்குடும்பம் என்ற படத்தின் மூலம்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்..

நாடக நடிகை
காயங்குளத்தில் இருந்த கேபிஏசி என்ற ஒரு பிரபல நாடக சபாவில் இணைந்து தன்னையே அர்ப்பணித்து கொண்டார்.. அங்குதான் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.. அந்த நாடக கம்பெனி பெயராலேயே அவர் கேபிஏசி லலிதா என்று அழைக்கப்பட்டார்... நாடகத்தில் கொடிகட்டி பறந்ததையடுத்து, மலையாள சினிமா உலகம் இவரை இருகரம் கூப்பி அழைத்து கொண்டது.. ஏராளமான கேரக்டர்களில் நடித்தார்.. இவரது குணச்சித்திர கேரக்டர்களுக்கு கேரளாவில் தனி ரசிகர் கூட்டமே உண்டு.

காதலுக்கு மரியாதை
மிகவும் கவனமாக கதையை தேர்ந்தெடுத்து, அதில் தன்னுடைய நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தினார் லலிதா.. தமிழில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்திருப்பார்.. தமிழ் மக்களுக்கு அப்போதுதான் இவர் மேலும் பரிச்சயமானார்.. தொடர்ந்து பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் போன்ற படங்களிலும் லலிதா தன் பங்களிப்பை செலுத்தியிருந்தார்.

தேவர் மகன்
கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா பதவியில் இருப்பவர்.. இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் சேர்த்து கிட்டத்தட்ட 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.. இவரது கணவர்தான் பிரபல மலையாள டைரக்டர் பரதன்.. இவர்தான் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் டைரக்டர் ஆவார்.. 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார் லலிதா.

உயிரிழந்தார்
74 வயதான லலிதாவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்தே உடம்பு சரியில்லாமல் இருந்தது.. தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையிலும் இருந்துள்ளார்.. பிறகு உடல்நலம் ஓரளவு தேறியிருக்கிறது.. அதனால் தன்னுடைய மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.. எனினும் அவரது உயிர் பிரிந்துவிட்டது.. அவரது மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கண்ணீர் அஞ்சலி
லலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லலிதாவின் கணவர் பரதன் கடந்த 1998ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.. லலிதாவுக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி என 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சித்தார்த் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார். இவரை மலையாள சினிமா துறையினர் மகேஸ்வரி அம்மா என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள்.. இப்போதும் அப்படியே கண்ணீருடன் அழைத்து, இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications