உதயநிதி ஸ்டாலினுக்கு மலேசிய அரசு அழைப்பு! விளையாட்டுத் துறை கட்டமைப்பை நேரில் பார்க்க வாங்க!
சென்னை: மலேசியாவின் விளையாட்டுத் துறை கட்டமைப்பை நேரில் பார்வையிட வருமாறு அந்நாட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவரது அழைப்பை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓரிரு மாதங்களில் அரசு முறை பயணமாக மலேசியா புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் திருநாளில் சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் உதயநிதி
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். விளையாட்டுத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் அது சார்ந்த அனைத்து பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இந்தியளவில் தமிழகத்தை விளையாட்டுத்துறையில் நம்பர் 1 ஆக்குவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

மலேசியா அழைப்பு
இந்தச் சூழலில் அயலகத் தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவக்குமார் வரதரஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மலேசியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் விளையாட்டுத்துறை கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்க்குமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு வந்துள்ள முதல் வெளிநாட்டு அழைப்பு மலேசியாவில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி பயணம்
மலேசிய அரசின் அழைப்பை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓரிரு மாதங்களில் அரசு முறை பயணமாக மலேசியா புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வரும் மே மாதத்துக்கு பிறகு விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பாக வெளிநாடுகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அமைச்சராவதற்கு முன்பு திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடன் சந்திப்பு
இதனிடையே மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சந்தித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் முதல்வருடன் மலேசிய அமைச்சர் காலை சிற்றூண்டியும் சாப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications