ஆகஸ்ட் 4ஆம்தேதி டெல்லிக்கு வாங்க! தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 8 பேருக்கு கார்கே அழைப்பு!
சென்னை: தமிழகத்தில் பாஜக பாய்ச்சல் காட்டி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 8 பேரை ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லிக்கு அழைத்து விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார் மல்லிகார்ஜுனே கார்கே.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பாஜக முழு வீச்சில் தொடங்கி பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் என்ன பணிகள் தொடங்கவேண்டும் எப்படி மக்களை அணுக வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அடுத்து யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கார்கே கருத்துக் கேட்கவுள்ளார். இதற்காக கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி (அன்புமணியின் மாமனார்), உள்ளிட்ட 8 காங்கிரஸ் பிரமுகர்கள் வரும் வாரம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், திமுகவுடனான கூட்டணி, வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகள் குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்கேவுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலும் இந்த ஆலோசனையில் பங்கேற்கவுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் குறித்த உறுதியான தகவல் வெளியாகக்கூடும். இதனிடையே அமித்ஷாவின் தமிழக வருகை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக ராகுல் அல்லது ப்ரியங்கா காந்தியை வைத்து தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications