30 குண்டுகள் முழங்க மரியாதை.. கொரோனாவால் இறந்த மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடல் நல்லடக்கம்
சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடலுக்கு 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை கொடுக்கப்பட்டது.
மருத்துவ ஊழியர்களை போலவே காவல்துறையினரும் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று, உயிரிழந்தார். முன்பு அவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த முதல் போலீஸ் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பாலமுரளி நோயின் காரணமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுரளி குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த பாலமுரளியின் உடலுக்கு நேற்று இரவு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாலமுரளி உடல் வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி, காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. கண்ணம்மாபேட்டை மயானத்தில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி பாலமுரளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று, அவர் உருவப் படத்திற்கு, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications