ஷாக்.. சென்னையில் சீறிவந்த ரயில்.. பதறி தண்டவாளத்தில் படுத்த முதியவர்! கடைசியில் ட்விஸ்ட்.. வீடியோ
சென்னை: சென்னை பல்லாவரத்தில் மின்சார ரயில் வேகமாக வந்த நிலையில் தண்டவாளத்தில் முதியவர்கள் ஒருவர் திடீரென்று படுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் மக்கள் பயன்பாட்டுக்காக மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று மாலையில் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.

பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்க சென்றது. ஆனால் பல்லாவரம் ரயில் நிலையத்தித்துக்கு முன்பே நடை மேம்பாலத்தின் கீழ் செல்லும் தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் சென்றார். பாய்ந்து வந்த ரயிலை பார்த்த அந்த நபர் திடீரென்று தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார். ரயிலின் வேகத்தை அவர் குறைத்தார். ஆனால் ரயில் நிற்கவில்லை. முதியவர் தண்டவாளத்தில் படுத்து கிடந்த நிலையில் அவரை கடந்து சிறிது தூரம் சென்ற பிறகு ரயில் நின்றது.

இதையடுத்து ரயிலில் இருந்து என்ஜின் டிரைவர், பொதுமக்கள் அனைவரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது அந்த முதியவர் ரயிலுக்கு நடுவே தண்டவாளத்தில் படுத்து வெளியே வர முயன்று கொண்டிருந்தார். இதனால் மற்றவர்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறுகியதாக இருந்தது.
இதனால் லேசான காயமடைந்து இருந்தாலும் அந்த முதியவரால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து மற்றவர்கள் அவருக்கு உதவி செய்தனர். இதையடுத்து அவர் ரயில் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருமழிசை பகுதியை சேர்ந்த ரவி (வயது 66) என்பதும், அவர் பல்லாவரம் வந்துவிட்டு ரயிலில் ஏறி புறப்பட்டு செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications