எக்ஸ்பிரஸ் ரயிலில் நெளிந்த உருவம்.. டக்னு பயணிகளிடம் நெருங்கிய "விருந்தாளி".. அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: ரயில் பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அதேபோல பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது.. இதற்கான தீவிர நடவடிக்கைகளில் ரயில்வே அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த சம்பவம், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளை வெலவெலக்க செய்து வருகிறது.
ரயில்வே நிர்வாகத்துக்கு பல்வேறு வழிகளில், ஏராளமான பண இழப்புகள் ஏற்பட்டாலும்கூட, பயணிகளின் நன்மையை தொடர்ந்து கவனத்தில் கொண்டு வருகிறது.

மற்றொருபக்கம் நஷ்டமாகும் செலவை சமாளிக்க முடியாமலும் திணறி வருகிறது.. இந்நிலையில்தான், படுக்கை விரிப்புகள் குறித்த ஒரு புதிய அறிவிப்பை நேற்று முன்தினம் ரயில்வே வெளியிட்டிருந்தது..
பெட்ஷீட்கள், கம்பளிகள்
அதாவது நீண்டதூர ரெயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 1 போர்வை, 1 தலையணை, 2 படுக்கை விரிப்புகள், முகம் துடைக்க ஒரு துண்டு போன்றவை ரெயில்வே சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பொருட்களை வடமாநில பயணிகள் சிலர், கையோடு எடுத்து சென்றுவிடுகிறார்களாம்.. இப்படி ரயில்வேயின் பொருட்களை களவாடி சென்றுவிடுவதால், ரெயில்வேக்கு வருடத்துக்கு ரூ.1 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுவிடுகிறது.
அதனால்தான், ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு போன்றவை எல்லாம் அதே எண்ணிக்கையில் இருக்கிறதா? என்று ரயில் கடைசியாக வந்து சேரும் ரெயில் நிலையத்துக்கு முன்பு கண்காணிக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படி திருடுவது நியாயமா
நேற்றைய தினமே 2 பேர் சிக்கிவிட்டார்கள்.. பூரியிலிருந்து டெல்லிக்கு செல்லும் புருசோத்தம் விரைவு ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில், ஒரு பெண்ணும் 2 ஆண்களும் பயணம் செய்துள்ளனர்.. அவர்கள் டெல்லியில் இறங்கும்போது, தங்களுடைய பெட்டி படுக்கைகளுடன் சேர்த்து, ரயிலில் தந்த பெட்ஷீட், கம்பளி போர்வைகளையும் மடித்து பைக்குள் வைத்திருக்கிறார்கள்.
அப்போது அங்கு வந்த டிடிஆர் இதைப்பார்த்துவிட்டு, "இப்படி பெட்ஷீட், கம்பளியை திருடுவது நியாயமா? அதை திருப்பி தந்துடுங்க, இல்லாட்டி ரூ.780 அபராதம் கட்டுங்கள்" என்றார்.
இதனால் திடுக்கிட்ட அந்த பயணிகள், தெரியாமல் பெட்ஷீட், கம்பளியைம் சேர்த்து மடித்துவிட்டோம் என்று சொல்லி, பையிலிருந்தவற்றை எடுத்து, வெளியில் வைத்துவிட்டு சென்றார்கள்.
பாம்புடன் ஏறிய நபர்
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில், மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்துள்ளது. அப்போது மங்காலி (Mungaoli) என்ற ஸ்டேஷனில் ஒருவர் ஏறினார்..
ரெயில் புறப்பட்டதுமே, திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்தார்.. இதைப்பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.. பாம்பை கண்டு அனைவருமே பயந்துபோய்விட்டனர்.
ரயில்வே தந்த பதில்
உடனே பாம்பாட்டி, அந்த பாம்பை பயணிகளிடம் பணம் கேட்டிருக்கிறார்.. பாம்பை பார்த்து பயந்த பயணிகளும், கையிலிருந்த பணத்தை பாம்பாட்டியிடம் தந்துள்ளனர்.. இந்த நிகழ்வுகள் அத்தனையும் அங்கிருந்த பயணி வீடியோ எடுத்து சொஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.
அத்துடன், ரயில்வேக்கும் ஆன்லைனில் புகார் தந்தார்.. இந்த புகாரை கண்டதுமே ரயில்வே நிர்வாகம் புகார் அளித்தவருக்கு பதிலளித்துள்ளது,
அதில் பக்கத்தில், "RPF க்கு உத்தரவிட வேண்டுமானால், மேலும் விரிவான விவரங்கள் தேவை.. . உங்களுடைய பயண விவரங்கள் (PNR/ UTS no.) மற்றும் செல்போன் எண்களும் எங்களுக்கு தேவைப்படும். DM வழியாக முன்னுரிமை அளிக்கப்படும். உங்களுடைய புகாரை http://railmadad.indianrailways.gov.in இதன் மூலம் அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 நம்பருக்கு டயல் செய்யலாம்" என்று பதிலளித்திருக்கிறது.
பாம்பு சம்பவம் - பயணிகளின் பாதுகாப்பு
எனினும், பாம்பை காட்டி பணம் பறித்தவரின் வீடியோவை சோஷியல் மீடியாவில் பார்த்ததுமே இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. அந்த வீடியோவில் பயணிகளுக்கு சில அங்குல இடைவெளியில் நின்று கொண்டு, பாம்பை காட்டி அச்சுறுத்துவதும், பயமும் பதற்றமும் அடைந்த பயணிகள் பணம் கொடுப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, பயணிகளை பயமுறுத்திய அந்த நபர் மீது ரெயில்வே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்து கமெண்ட்களை பதிவிட்டவாறு உள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த பாம்பு சம்பவம் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகமாகவே எழுப்பிவிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications