பைக் கேட்ட தம்பியின் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்.. சென்னையில் பயங்கரம்
Recommended Video

சென்னை : சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொருக்குப்பேட்டை கஸ்தூரி பாய் நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடிபழக்கத்திற்கு அடிமையான அவர், பைக் வாங்கி தருமாறு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவருடைய அண்ணனான வெங்கடேசன் என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந் நிலையில் கொருக்குப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் வெங்கடேசன் சென்றபோது அங்கு வந்த கணேசன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போதையில் இருந்த கணேசன் தொடர்ந்து வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட, ஆத்திரமடைந்த வெங்கடேசன் அங்கு வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனை கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications