இன்ஸ்டாவில் அந்த மாதிரியான போட்டோவை கேட்டு டார்ச்சர்! இளம்பெண் பகிர்ந்த மோசமான அனுபவம்!
சென்னை: இன்ஸ்டாகிராம் என்பது 2கே கிட்ஸின் மிகவும் விருப்பப்பட்ட சோஷியல் மீடியா தளமாக இருக்கிறது. ஆனால், அதில்தான் நிறைய அத்துமீறல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஆண்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான உதாரணமாக இது இருக்கிறது.
ரெடிட் தளத்தில் இது குறித்து அப்பெண், "ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு நபர், தற்போது தன்னை அச்சுறுத்துகிறார். நான் மிகவும் பயந்துபோய் இருக்கிறேன், என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில், அந்தப் பெண்ணும் ஆணும் அறிமுகமாகியுள்ளனர். சில நாட்கள் பேசிய பின்னர், இருவரும் தங்களது தனிப்பட்ட தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். தன்னுடைய நண்பர்களும், அந்த இளைஞருக்கு நண்பர்களாக இருப்பதால், இளைஞரின் நட்பு அழைப்பை இளம்பெண் ஏற்றிருக்கிறார்.
ஆனால், சில நாட்களிலேயே அந்த நபர் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அறிமுகமாகி சில நாட்களிலேயே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியதும், அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இத்துடன் விடவில்லை, தனிப்பட்ட புகைப்படங்களையும் இளைஞர் கேட்டிருக்கிறார். இந்த புள்ளியில்தான் சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை பிளாக் செய்துள்ளார்.
இது குறித்து ரெடிட் தளத்தில் அந்தப் பெண் எழுதியதாவது, "கடந்த ஆண்டு நவம்பரில் அல்லது அதற்கு முன் ஒருவரை சந்தித்தேன். இன்ஸ்டாகிராமில் பொதுவான நண்பர்கள் இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் பின்தொடர்ந்தோம். அவர் என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்புவதாக கூறினார். சில நாட்கள் அவரிடம் பேசிய பிறகு எண்களைப் பரிமாறிக்கொண்டேன். அவர் என்னிடம் விருப்பம் தெரிவித்து, தன்னை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.
இது விசித்திரமாக இருந்தது, ஏனெனில் அவர் 900+ பெண்களைப் பின்தொடர்ந்திருந்தார். அவர் தனிப்பட்ட புகைப்படங்களையும் கேட்கத் தொடங்கினார். நான் அவரைப் பிளாக் செய்துவிட்டேன்.
புதிய மொபைல் வாங்கியபோது, எதிர்பாராத விதமாக அந்த நபரின் எண் அன்-ப்ளாக் ஆகியுள்ளது. இது விஷயங்களை மேலும் மோசமாக்கியது. "இன்று அவரது எண்ணிலிருந்து 4 மிஸ்டு கால்கள் வந்திருந்தன. நான் இந்த நபரை முற்றிலும் மறந்துவிட்டேன். அவர் எனக்கு 'நீங்கள் விரைவில் பிரபலமாவீர்கள்' என்று மெசேஜ் செய்திருந்தார். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் பதிலளிக்கவில்லை. சொல்லவில்லை. அந்த எண்ணையும் பிளாக் செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
தேசிய சைபர் உதவி மையம் இத்தகைய எச்சரிக்கைகளை அச்சுறுத்தல்களாகக் கருதி புறக்கணிப்பதாகவும், சம்பவம் நடந்த பிறகுதான் தலையிடுவதாகவும் அந்தப் பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவைப் பார்த்த மற்ற பயனர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் எந்தத் தனிப்பட்ட தகவல்களையும் பகிராததால், கவலைப்பட வேண்டாம் என்றும், அந்த நபரை அனைத்து தளங்களிலும் பிளாக் செய்யுமாறும் அறிவுறுத்தினர்.
"நீங்கள் எதையும் பகிரவில்லை அல்லவா? அதனால் அவரை எல்லா இடங்களிலும் பிளாக் செய்துவிட்டு அமைதியாக இருங்கள்" என்று கூறியுள்ளனர்.
அப்பெண், "ஆண்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கிறார்கள்? அவர்கள் அமைதியாக வாழவும் மாட்டார்கள், பெண்களை வாழ விடவும் மாட்டார்கள். நல்ல வேளை, மற்ற சாதாரண ஆண்கள் யாரும் அவரை போல இல்லை. அப்படி இருந்தால் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் ஒரு கோமாளி " என்று சாடியுள்ளார்.
பாலியல் அத்துமீறலின் அடிப்படை ஆண்களின் வளர்ப்புகளில்தான் இருக்கிறது. பெண்களை எப்படி அணுக வேண்டும்? எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கு சிறு வயது முதல் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications
