பரபரத்த தலைமைச் செயலகம்.. தீக்குளித்த முதியவர்.. புகார் கொடுத்தும் போலீஸ் சும்மா இருந்ததால் விபரீதம்
சென்னை : சென்னையில் தலைமைச் செயலகம் அருகே பொன்னுசாமி என்ற முதியவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். சுப்பிரமணி என்பவருக்கு கொடுத்த கடன் ரூ.14 லட்சம் திருப்பி வராததால் பொன்னுசாமி தீக்குளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பொன்னுசாமி. இவர் சுப்பிரமணி என்பவருக்கு ரூ. 14 லட்சம் பணத்தை கடனாகக் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தை திருப்பித் தரவில்லை.

சுப்பிரமணியிடம் பல முறை தனது பணத்தைக் கேட்டும் திருப்பித் தராததால் மனமுடைந்த பொன்னுசாமி பணத்தை திருப்பித் வாங்கி தர வேண்டும் என போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தனது பணத்தை திருப்பித் வாங்கி தர வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இன்று தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
தலைமை செயலக பகுதியில் திடீரென ஒருவர் தீக்குளித்தது அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்தவர்களும், போலீசாரும் தீயை உடனடியாக அணைத்து பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலக பகுதியில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications