இவரெல்லாம் ஒரு மனுஷனா.. குழந்தை கதற கதற.. மனைவியை கொடூரமாக தாக்கி.. ஷாக் வீடியோ
மனைவியை கண்மூடித்தனமாக கணவன் தாக்கிய வீடியோ வைரலாகிறது
சென்னை: இவரெல்லாம் ஒரு மனுஷனா? என்று தான் ஒவ்வொருவருக்கும் கேட்க தோன்றுகிறது இந்த வீடியோவை பார்த்தால்.. கட்டில் மேல் உட்கார்ந்து கொண்டு.. மனைவியை மிக கொடூரமாக தாக்குகிறார் இந்த ஈவிரக்கமற்ற நபர்!!
நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. நாடு எவ்வளவுதான் முன்னேறினாலும் சிலரது குணங்கள் அப்படியே மிருகத்தனமாகவே உள்ளது.

இதுபோன்றவர்களை எதிர்கொள்ள முடியாமல் பெரும் சிக்கலில் உள்ளனர் பெண்கள்.. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தண்டனைகளை தந்தாலும் சிலர் இன்னும் திருந்தாமலே உள்ளனர்.
அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. வடமாநிலத்தை சேர்ந்த குடும்பம் போல தெரிகிறது.. கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை அடித்து உதைக்கிறார். மனைவியை தரையில் உட்கார வைத்து, கட்டிலில் உட்கார்ந்து மூர்க்கத்தனத்துடன் அடிக்கிறார்.
அவரது தலைமுடியை பிடித்து.. இழுத்து.. ஆட்டி.. சரமாரியாக தாக்குகிறார்.. மனைவி எழுந்து போய்விடக்கூடாது என்பதற்காக காலின் இடுக்கில் அவரை இழுத்து பிடித்தும் கொள்கிறார்.. கண்மூடித்தனமாக அடிப்பதில் மனைவி வலியால் கதறுகிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் இப்படி சண்டை போடுவதை பக்கத்தில் இருந்தே அவர்களது ஒரு வயது குழந்தை தரையில் படுத்து கொண்டு மிரள மிரள விழித்து பார்க்கிறது. இவர்களின் களேபரத்தில் அந்த குழந்தை அழ ஆரம்பிக்கிறது.. கடைசியில் மனைவி, குழந்தையை வாரி அணைத்து கொள்கிறார்.. அப்போதும் கணவர் அடங்கவில்லை.. மனைவியை அடிக்க கை ஓங்குகிறார்.
எதையோ மிரட்டி கொண்டே இருக்கிறார்.. இந்த வீடியோவை யார் எடுத்து பதிவிட்டனர் என்று தெரியவில்லை.. இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை என்னவென்றும் தெரியவில்லை.. ஆனால், ஆண்களின் வன்முறை என்று கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனையை தர வேண்டும் என்றும் கமெண்ட்களை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications