பாகப்பிரிவினை, பவர் பத்திரம்.. சொத்து பத்திரங்களில் பிழை இருக்கா? கிரையம் பண்ணும் முன் இது கட்டாயம்
சென்னை: சொத்து பத்திரங்களில் ஏதாவது பிழைகள் நேர்ந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த பிழைகளை சரி செய்து கொள்ள முடியுமா?
ஒரு குறிப்பிட்ட நபர், அவருடைய சொத்துக்களை சட்டப்பூர்வமாக, சில தனிப்பட்ட விவரங்களை தந்து பெறக்கூடியதுதான் பத்திரங்கள் ஆகும்.. அதாவது ஒரு சொத்தினை, மற்றவருக்கு சட்டப்பூர்வமாக விற்பதற்கு இதுபோன்ற பத்திரங்கள் உதவுகின்றன..

பிழைகள்: அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பத்திரங்களில் தவறுகள் எதுவுமே இல்லாதிருப்பது அவசியமாகும். குறிப்பாக, எழுத்துப்பிழைகள் இல்லாமல் பத்திரங்கள் இருக்க வேண்டும். வீடு, நிலம் வாங்குபவர்கள், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களில் ஏதாவது எழுத்துப்பிழை உள்ளதா? ஏற்கனவே எழுத்துப்பிழை திருத்தப்பட்டதா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.
ஏனென்றால், சொத்து குறித்து பழைய பத்திரத்தில் உள்ள விபரங்கள் அடிப்படையில் தான் கிரைய பத்திரங்கள் எழுதப்படும்.. பழைய பத்திரம் சரியாக இருக்கும்பட்சத்தில்தான், சார் பதிவாளர் பதிவு செய்திருப்பார் என்ற நம்பிக்கையில், சொத்துவாங்குபவர்களும் அறியாமல் விட்டுவிடுவார்கள்.. பழைய பத்திரங்களில் பிழைகள் இருக்கிறதா? என்பதை சிலர் சரியாக ஆராய்வதில்லை.
தட்டச்சு: ஆனால், வீடு, மனை தொடர்பான பத்திரங்கள், ஆவண எழுத்தர் மேற்பார்வையில் தட்டச்சு செய்து தான் பெரும்பாலான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படுகின்றன என்பதால், இதில் சிறிய அளவிலான ஏதாவது எழுத்து பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முக்கியமாக, சொத்தின் சர்வே எண், பரப்பளவு, விற்பவரின் முகவரி போன்ற தகவல்களில் டைப்பிங் செய்வதில் ஏதாவது சிறிய பிழை நேர்ந்துவிடலாம்.. அந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டு சில வருடங்கள் கழித்தே, இதுபோன்ற பிழைகள் தெரியவரலாம்.
திருத்தங்கள்: எனினும் எந்தவொரு சிறிய தட்டச்சு பிழையிருந்தாலும் கூட, சம்பந்தப்பட்டவர்கள் சார்-பதிவாளரை அணுகி, பத்திரத்தில் காணப்படும் பிழைகளை திருத்திவிட வேண்டும்.. அதேபோல, உங்களிடம் காட்டப்படும் பத்திரத்தில் திருத்தங்கள் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். ஏனென்றால், தவறான விபரங்கள் அடிப்படையில் புதிய கிரைய பத்திரம் தயாரிக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் பதிவுத்துறை அதிகாரிகள்.
அதேபோல, பத்திரத்தில் எழுத்து மற்றும் வார்த்தை பிழை இருந்தால், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.. பிழையை திருத்துவதை பிழை திருத்தல் பத்திரம் அதாவது பிழையை சரிப்படுத்தும் ஆவணம் என்பார்கள்.. RECTIFICATION DEED என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
2 வகையான பிழை திருத்தம்: 2 வகையான பிழை திருத்தம் பத்திரங்கள் உள்ளன.. ஒன்று சாதாரண பிழை திருத்தல் பத்திரம், இன்னொன்று உரிமை மாறக்கூடிய பிழை திருத்த பத்திரம் ஆகும்.
கிரயம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம், அடமானம், விடுதலை, அக்ரிமென்ட் போன்ற ஆவணங்களை பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம். அதேபோல, பத்திரத்தில் உள்ள திசைகள், ஊர் பெயர், நமது பெயர் போன்று, தனக்கு மட்டுமே பிரச்சனையாக உள்ள பத்திரங்களுக்கு சாதாரண பிழை திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
முத்திரை கட்டணம்: சாதாரண பிழை திருத்தல் பத்திரத்திற்கு 500 ரூபாய்க்குள் செலவுகள் முடிந்துவிடுமாம். உங்களுக்கு சொத்தினை விற்பனை செய்து பத்திரம் ஏற்படுத்தி கொடுத்த நபரால் இந்த பிழையை மாற்றி கொள்ளலாம்.
பத்திரத்தில் சொத்துக்களின் அளவு மாறி இருந்தால் அதற்கு போடப்படுவதுதான் உரிமை மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம். பத்திரத்தில் ஏக்கர் என்பதற்கு பதில் சென்ட் என்று தவறாக மாற்றி எழுதியிருந்தால், அதிக முத்திரை கட்டணம் செலுத்தி பிழையை திருத்தி கொள்ள வேண்டும்.. எனவே, சொத்து தொடர்பான பத்திரங்களின் உண்மை தன்மை, அது தொடர்பான வில்லங்கம் எதுவும் உள்ளதா என்பதை வழக்கறிஞர்களை அணுகி சரிபார்த்து, அவர்களின் ஆலோசனையை பெறுவது மிகவும் முக்கியமாகும்.
எனினும், பத்திரப்பதிவுக்காக ஆவணங்களை தயார் செய்யும்போதே, வார்த்தைக்கு வார்த்தை சரியாக உள்ளதா என்பதை படித்து பார்க்க வேண்டும். எந்தப் பிழையாக இருந்தாலும் அதைச் சரி செய்துவிட முடியும் என்றாலும், இதனால் தேவையற்ற அலைச்சல், குழப்பங்கள் வரலாம். எனவே, பத்திரப்பதிவு ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு முன்பே, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது. வழக்கறிஞர் மூலமும் ஒருமுறை படித்துக்கொள்வதும் எதிர்காலத்தில் கூடுதல் சிக்கல்களை தவிர்க்க உதவும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications