சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‛மாமாகுட்டியே’ கூப்பிட்டாலும் ஈசிஆர் பக்கம் போகாதீங்க.. ஐஏஎஸ் அதிகாரியின் புயல் ‛அலர்ட்’..டிரெண்ட்

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், ‛மாமாகுட்டியே கூப்பிட்டாலும் ஈசிஆர் பக்கம் போகாதீங்க'' என ஐஏஎஸ் அதிகாரி விஜயகார்த்திகேயன் அலர்ட் செய்து அட்வைஸ் கொடுத்த பதிவு தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் துவங்கியது. இதையடுத்து ஏற்பட்ட வானிலை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாகும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த புயல் உருவாகும் பட்சத்தில் மாண்டஸ் என பெயரிடப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மாண்டஸ்.. இப்போ எங்க இருக்கு? எந்த மாவட்டங்களுக்கு மழை? ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மாண்டஸ்.. இப்போ எங்க இருக்கு? எந்த மாவட்டங்களுக்கு மழை?

 கரையை கடந்த மாண்டஸ்

கரையை கடந்த மாண்டஸ்

அதன்படி வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானது. இது தீவிர புயலாக உருமாறி நேற்று மதியம் வலுவிலந்து கரையை கடக்க வேகமாக வந்தது. இந்த புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியது. இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 அதிகாரிகள் அறிவுரை

அதிகாரிகள் அறிவுரை

இந்நிலையில் புயல் கரையை கடப்பதையொட்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னை-புதுச்சேரி இடையேயான ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மாண்டஸ் புயலையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

 கவனம் பெற்ற ஈசிஆர் சாலை

கவனம் பெற்ற ஈசிஆர் சாலை

இந்த புயல் காரணமாக புதுச்சேரி-சென்னை ஈசிஆர் சாலை அதிகமாக பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதோடு முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு மின்சாரம் தடை செய்யப்பட்டது. பொதுவாக வீக் எண்ட் தினங்களில் ஈசிஆர் சாலையில் ஏராளமானவர்கள் ஜாலி ரைட், லாங்க் ட்ரைவ் செல்வது வழக்கம். இதனால் தான் அந்த சாலையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

 ஐஏஎஸ் அதிகாரி விஜயகார்த்திகேயன்

ஐஏஎஸ் அதிகாரி விஜயகார்த்திகேயன்

இந்நிலையில் தான் புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரியான விஜயகார்த்திகேயன் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலர்ட் செய்தார். இவர் தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடப்பதற்கு முன்பு விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.

 மாமாகுட்டி கூப்பிட்டாலும் போகாதீங்க

மாமாகுட்டி கூப்பிட்டாலும் போகாதீங்க

அந்த பதிவில், ‛‛ஈசிஆரில் லாங்க் ட்ரைவ் போகலாம் என்று உங்களின் மாமாகுட்டியே கூப்பிட்டாலும் போகதீங்கள். வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவு செய்திருந்தார். சமீபத்தில் வெளியான லவ் டூடே என்ற திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த படத்தில் வரும் ‛மாமாகுட்டி' எனும் வார்த்தை டிரெண்ட் ஆனது. படத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகியை, ஒருவரை ‛கன்னுக்குட்டி' என செல்லமாக அழைப்பார். பதிலுக்கு கதாநாயகி அவரை ‛மாமாகுட்டி' என அழைப்பார். மேலும் அவர் காதாநாயகியை ‛லாங்க்ட்ரைவ்' செல்ல அழைப்பார். இது மிகவும் டிரெண்ட் ஆனது.அந்த பதிவில், ‛‛ஈசிஆரில் லாங்க் ட்ரைவ் போகலாம் என்று உங்களின் மாமாகுட்டியே கூப்பிட்டாலும் போகதீங்கள். வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவு செய்திருந்தார். சமீபத்தில் வெளியான லவ் டூடே என்ற திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த படத்தில் வரும் ‛மாமாகுட்டி' எனும் வார்த்தை டிரெண்ட் ஆனது. படத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகி, ஒருவரை ‛கன்னுக்குட்டி' என செல்லமாக அழைப்பார். பதிலுக்கு கதாநாயகி அவரை ‛மாமாகுட்டி' என அழைப்பார். மேலும் அவர் காதாநாயகியை ‛லாங்க்ட்ரைவ்' செல்ல அழைப்பார். இது மிகவும் டிரெண்ட் ஆனது.

 நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

இந்நிலையில் தான் அந்த காட்சியில் வரும் ‛மாமாகுட்டி' வார்த்தையை பயன்படுத்தி ஈசிஆருக்கு செல்ல வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களிடம் தெரிவிக்கும் வகையில் விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் இவ்வாறு பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையதளத்தில் வேகமாக பரவி டிரெண்ட்டானது. இதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 டிரெண்ட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்

டிரெண்ட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்

தமிழகத்தில் தற்போது உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் இளைஞர்கள், மாணவர்களுக்கு தற்போதைய சூழலில் டிரெண்ட்டில் இருக்கும் விஷயங்களை வைத்து விழிப்புணர்வு, அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட வடகிழக்கு பருவமழையை சுட்டிக்காட்டி பல மாணவர்கள் நேரடியாக மாவட்ட கலெ க்டர்களின் ட்விட்டர் பக்கத்தை விடுப்பு கேட்ட சம்பவங்கள் நடந்தன. இந்த வேளையில் கலெக்டர்கள் மாணவர்களுக்கு புரியும் படியும், அதேநேரத்தில் வேடிக்கையாகவும் பல விஷயங்களை கூறி விடுமுறையா?, இல்லையா? என்பதை அறிவித்தனர். அந்த வகையில் சமீபத்தில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, ‛‛பாலே இங்க தேறல பாயாசம் கேக்குதா'' எனக்கூறி மழை பெய்யவில்லை. பள்ளி உண்டு என மாணவருக்கு பதிலளித்தார். அந்த வரிசையில் தற்போது விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் புயல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A post of IAS officer Vijayakarthikeyan alerting and advising Even if Mamakutty calls you for a long drive don't go to ECR'' is currently trending on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X