குடும்ப அரிசி அட்டைதாரர்களே.. பாமாயிலை விடுங்க.. இனி "இதெல்லாம்" ரேஷனில் தரப்போறாங்க.. அரசு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வரும்நிலையில், இனி கூடுதலாக மற்றொரு பொருளையும் ரேஷனில் வினியோகிக்க முடிவு செய்துள்ளதாம்.
விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.
இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதாம்.

பண்டிகை சீசன்: இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம்.
அதுமட்டுமல்ல, பண்டிசை சீசன் துவங்க உள்ளதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல, தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறதாம்.
தேங்காய் எண்ணெய்: இதனிடையே ரேஷனில் விரைவில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம்வருகின்றன. அதேபோல, டான்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு சென்று, ரேஷன் கடைகளில் தேயிலை துாள் விற்பனை செய்யும் நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க போவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..
அதன்படி, கூட்டுறவு பொருட்களை, ரேஷன் கடைகளில் விற்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதாவது, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் மங்களம் என்கிற பெயரில் மஞ்சள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோப்பு ஆகிய அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்... மேலும், இந்த பொருட்கள் அனைத்துமே குறைவான விலையில் இருப்பதுடன், நல்ல தரமானதாகவும் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மங்களம்: எனவே, இந்த பொருட்களை எல்லாம், மாநிலம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதந்தோறும் 170 டன் மஞ்சள், 36 மசாலா பொருட்கள், 161 டன் மாவு வகைகள், 132 டன் உளுந்தம் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு தொழிலாளர்களால் தயார் செய்யப்படும் மசால் வகைகள், பருப்பு வகைகள் அனைத்துமே, இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
