நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. காலையிலேயே பஞ்சாயத்தை கூட்டிய மாணிக்கம் தாகூர்.. அப்போ திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி குறித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாணிக்கம் தாகூர் இன்று செய்துள்ள போஸ்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

tamil nadu assembly elections 2026 congress

இருப்பினும், திமுக தரப்பு இதற்கு ஆரம்பத்திலிருந்தே முரண்பட்டு வருகிறது. அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் அதிரடி பதில்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிகாரப் பகிர்வு குறித்த காங்கிரஸின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தார். அவர் கூறியதாவது:

கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்திற்குச் செட் ஆகாது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் (காங்கிரஸ்) தெரியும். தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கச் சிலர் சதி செய்கிறார்கள்.

திமுக தனித்து ஆட்சி அமைப்பதிலேயே உறுதியாக இருப்பதாகவும், வலுவான நிலையில் இருக்கும்போது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்றும் திமுக கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என அடம்பிடித்தால், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற தொனியில் திமுக தரப்பிலிருந்து மறைமுக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதாவது திமுக தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட மெசேஜில்.. நீங்கள் கூட்டணியில் இருக்கலாம்.. ஆனால் ஆட்சியில் பங்கு இருக்காது.. பங்கு வேண்டும் என்றால் நீங்கள் கூட்டணியில் இருந்தே வெளியேறலாம், என்று காங்கிரஸிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். முக்கியமாக பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட்டணி தொடராது என்று திமுக தரப்பு கூறியதாக தெரிகிறது.

ராகுல் காந்தியைத் தனது "சகோதரர்" என்று அழைக்கும் ஸ்டாலின், தனிப்பட்ட முறையில் சுமுகமான உறவைப் பேணினாலும், ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரை சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதை இனி காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் உத்தரவு

இப்படிப்பட்ட நிலையில்தான் கூட்டணி குறித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 75 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முக்கியமாக ஆட்சி அதிகாரம் பங்கு குறித்து யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் கருத்துகள் கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறி கருத்துகள் கூறப்படுவதால் கூட்டணி கட்சிகள் இடையே இணக்கமற்ற சூழல் ஏற்படுகிறது. கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் சார்பாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாணிக்கம் தாகூர் இன்று செய்துள்ள போஸ்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. காலை வணக்கம் என்று அவர் செய்துள்ள போஸ்டில், தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!, என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+