நீங்க தோற்ற இடத்தைதான் கேட்கிறோம்! திமுகவை மீண்டும் சீண்டிய மாணிக்கம் தாகூர்! இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: ஆட்சியில் பங்கு என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் மீண்டும் இதே கருத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வேறு விதமாக வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி பங்கீடு விஷயத்திலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு விஷயத்திலும் காங்கிரஸின் டோன் மாறியிருக்கிறது. சமீபத்தில் நடந்த பீகார் உட்பட பல மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் மண்ணை கவ்வியிருக்கிறது. இப்படி இருக்கையில் இங்கு வந்து ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசு உடன் பிறப்புகளை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

விடாப்பிடியாக நின்ற காங்கிரஸ்
குறிப்பாக மாணிக்கம் தாகூரின் பேச்சை உடன் பிறப்புக்கள் சுத்தமாக ரசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக பதில் சொல்லிவிட்டார். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் சாத்தியமில்லை. அதை ஏற்க மாட்டார்கள் என்று தெளிவுப்படுத்திவிட்டார். இருப்பினும் காங்கிரஸ் விடாப்பிடியாக இதே கருத்தை வெளிப்படுத்தி வருகிறது.
காங்கிரஸின் தவறு
முன்னதாக பிப்.11 அன்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவை போட்டிருந்தார். அதில், "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு" என்று கூறியிருந்தார்.
2006 தேர்தல்
மாணிக்கம் தாகூர் குறிப்பிட்ட 2006 தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக 163 இடங்களில் வெற்றிபெற்றாலும் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. திமுக 96 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தயவோடு ஆட்சியில் பங்கு கொடுக்காமல் திமுக ஆட்சியமைத்தது.
மைனாரிட்டி திமுக
2006-2011 ஆட்சிக்காலத்தை மைனாரிட்டி திமுக ஆட்சி என தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்து வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருந்தார் மாணிக்கம் தாகூர்.
இப்படி இருக்கையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து சூசகமாக பேசியிருந்தார். "நமக்கும் பாஜகவுக்கும்தான் பொட்டி எதிர்க்கட்சியாக வர இருப்பது பாஜகதான். விலைக்கு வாங்கிவிடுவார்கள். இந்த தொகுதியில் ஜெயிக்க முடியாது. 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். இதில் 150-160 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்" என்று கூறியிருந்தார்.
2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 14, 2026
அதிகார பகிர்வு அவசியம்.
ஆட்சி பங்கு எங்கள் உரிமை.
மக்கள் தீர்மானிப்பார்கள். https://t.co/DqLcEeG8yU
2021 தேர்தலில் யாருக்கு எவ்வளவு சீட்?
அதாவது கடந்த தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறையும் இதே அளவுக்கான தொகுதிகளில்தான் போட்டியிட முடிவெடுத்திருக்கிறது. அப்படியெனில் கடந்த முறை ஒதுக்கப்பட்ட இடங்களைதான் இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்க இருக்கிறது என அர்த்தம்.
- திமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் - 173
- உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் - 15 (மதிமுக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள்)
- காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் - 25
- சிபிஎம் - 6
- விசிக - 6
- சிபிஐ - 6
- ஐயுஎம்எல் - 3
மாணிக்கம் தாகூர் சொன்னது
இந்த முறையும் இதே எண்ணிக்கையில்தான் சீட் ஒதுக்கப்பட உள்ளது. இப்படி இருக்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சை டேக் செய்து, தனது x பக்கத்தில் மாணிக்கம் தாகூர் கூறியதாவது, "2021ம் ஆண்டு 173ல் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். அவரது கருத்தை உடன் பிறப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications