சாந்தினியா.. அந்த பொண்ணு யாரென்றே எனக்கு தெரியாது.. பணம் பறிக்கும் கும்பல் போல!.. மணிகண்டன் மறுப்பு
சென்னை: நடிகை சாந்தினி யாரென்றே எனக்கு தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அவர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மணிகண்டன் என்னை ஏமாற்றிவிட்டார்.
திருமணம் செய்வதாக என்னுடன் ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்தோம். சென்னைக்கு வந்தாலே என்னுடன்தான் இரவு தங்குவார். இவரால் நான் 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன்.

கட்டாய கருக்கலைப்பு
கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துவிட்டார். ஆனால் திருமணம் செய்து கொள்ள கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். என்னுடன் அவருக்கு இருக்கும் பழக்கம் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். நான் குளிக்கும் போது என்னை அரை நிர்வாணமாக போட்டோ எடுத்துக் கொண்டு அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருகிறார் என்றார்.

பாலியல் புகார்கள்
குற்றச்சாட்டுகளையும் பாலியல் புகார்களையும் கூறிய சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் செல்போனில் வாட்ஸ் ஆப்பில் அவருடன் பேசிய சாட்டுகளையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனியார் தொலைகாட்சி சேனல் தொடர்பு கொண்டு கேட்டது.

வழக்கறிஞர்
அதற்கு அவர் அந்த பெண் யாரென்றே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தொலைபேசி மூலம் கூறுகையில் ,அந்தப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. புகைப்படங்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என அந்தக் கும்பல் மிரட்டியது. எனது வழக்கறிஞர் மூலம் விசாரித்தேன்.

பேரம் பேசிய கும்பல்
அப்போதுதான் அவர்கள் பணம் பறிக்கும் கும்பல் என்பதை அறிந்தேன். முதலில் புகைப்படங்களை வெளியே சொல்லாமல் இருக்க 3 கோடி கேட்டார்கள், பின்னர் 2 கோடி, 30 லட்சம் என பேரம் பேசினார்கள். தவறு செய்தால்தானே பயப்பட வேண்டும். நான் எந்த தவறும் செய்யாத போது ஏன் பயந்து போய் பணம் கொடுக்க வேண்டும்? என கேட்டுள்ளார் மணிகண்டன்.












Click it and Unblock the Notifications