மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஓங்கட்டும்! ஒன்றுபட்டு உழைப்போம்! தமிமுன் அன்சாரி தீபாவளி வாழ்த்து!
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தீபாவளி திருநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
மதமாச்சரியங்களை விலக்கி அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வழக்கம் போல இவ்வாண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இத்தருணத்தில் எமது உறவுகளான இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது பாரம்பரிய பண்புகளான மத நல்லிணக்கம், விருந்தோம்பல், சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேலும் வளர்த்தெடுக்கவும், நாட்டை ஒற்றுமையுடன் வழி நடத்தவும் இந்நாளில் உறுதியேற்போம்.
அமைதியும், மகிழ்ச்சியும் ஒங்கிட ஒன்றுபட்டு உழைப்போம் எனக் கூறி , மீண்டும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது தீபாவளி வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications