மார்ச் 5-ம் தேதி திவாகரன் மகனுக்கு திருமணம்... அழைப்பிதழ் ரெடி
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நடைபெறவுள்ளதால், அதில் பங்கேற்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார்.
திசைமாறி பயணிக்கும் திவாகரனையும், தினகரனையும் திருமண வீட்டில் ஒன்றிணைத்து பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பார் சசிகலா எனக் கூறப்படுகிறது.
மேலும், பிரிந்து கிடக்கும் உறவுகளை ஒன்று சேர்க்க இந்த திருமணம் ஒரு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதழ்
சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கு 2020 மார்ச் 5-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் திவாகரன். மேலும், திருமணத்துக்கான அழைப்பிதழும் தயாராகி வருகிறது.

பரோலில் சசி
ஜெய் ஆனந்த் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சசிகலா பரோலில் வர இருக்கிறார். அவ்வாறு அவர் வரும் போது பிணக்குகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் உறவுகள் ஒன்றுக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது வருகையை ஆளுங்கட்சி தரப்பு மிரட்சியோடு பார்க்கிறது.

டிடிவி தம்பி
திவாகரனுக்கு சம்பந்தி ஆகப்போவது வேறு யாருமில்லை, அக்கா மகனும் தினகரனின் உடன் பிறந்த தம்பியுமான பாஸ்கரன் தான். அவரது மகளைத் தான் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் மணம் முடிக்க உள்ளார். இருவரும் காதல் திருமணம் பிரிவது குறிப்பிடத்தக்கது.

நீலாங்கரை வீடு
கடந்த வாரம் சென்னை நீலாங்கரை வீட்டில் திவாகரன் மகனுக்கு நிச்சயத்தார்த்த விழா நடைபெற்றது. அதில் முக்கியமான குடும்ப உறவினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இதனிடையே நிச்சயதார்த்த விழாவின் சிறப்பு என்னவென்றால் மாப்பிள்ளைக்கு போட்டியாக மாமனாரும் (பாஸ்கரன்) இளமைத் தோற்றத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து தோற்றமளித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications