சட்டசபைக்கு நீல நிற துணிப்பையில் "பாரம்பரியத்தை" கொண்டு வந்த டிஆர்பி ராஜா! வேடிக்கை பார்த்த சகாக்கள்
சென்னை: வேளாண் பட்ஜெட் அன்று மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நீல நிற துணி பையில் ஒரு பொருளை கொண்டு வந்திருந்தார். அதை சக உறுப்பினர்களுக்கு காண்பித்து விளக்கி கொண்டிருந்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மன்னார்குடியின் எம்எல்ஏவாக 3ஆவது முறையாக டிஆர்பி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 முறை மக்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு காரணம் அந்த தொகுதிக்கு அவர் ஆற்றி வரும் வளர்ச்சி திட்டங்கள்தான்.
மின்னும் மன்னை என்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இதற்காக அமைச்சர்களுடனும் ஏன் முதல்வரிடமே சில திட்டங்களுக்காக ராஜா "போராடி" பெற்று வருகிறார். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர், விளையாட்டு, அரசியல், விண்வெளி, உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள் குறித்தெல்லாம் பேசுவார்.

எதிர்க்கட்சியினருக்கு பதிலடி
எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுப்பதிலும் தவறுவதில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த வேளாண் பட்ஜெட்டின் போது கழுத்தில் பச்சை நிற துண்டை அணிந்து கொண்டு வந்து அனைவரின கவனத்தையும் ஈர்த்தார் டிஆர்பி ராஜா. அது போல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மஞ்சள் பை இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

துணிப்பை கொண்டு வந்த ராஜா
அப்போது சட்டசபை கூட்டத் தொடரின் போது துணிப்பையால் ஆன பேக்கை கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் டிஆர்பி ராஜா. இதை பார்த்த நெட்டிசன்கள், "ராஜா சார், என்ன ஸ்னாக்ஸ் கொண்டு போனீங்க" என ஜாலியாக கலாய்த்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் திமுக அரசின் 2ஆவது வேளாண் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நீல நிற கவர்
அப்போது சட்டசபைக்கு வந்த டிஆர்பி ராஜா, ஒரு பைக்குள் நீல நிற கவரில் ஏதோ ஒரு உணவு பொருளை வைத்திருந்தார். அது என்னவென பார்த்த போது குழியடிச்சான் பாரம்பரிய நெல் ரகம் என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், குழியடிச்சான் நெல் ரகம் உவர் நிலத்திலும் (உப்பு மண்) முளைத்து விளைச்சல் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய நெல் ரகமாகும்.

குழியடிச்சான் நெல் ரகம்
கடலோர மாவட்ட விவசாயிகள் இந்த நெல் ரகத்தை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளலாம். குறைந்த அளவு தண்ணீரை கொண்டே அதிக மகசூல் தரக் கூடிய ரகமாகும். தாய்ப்பால் சுரப்பதற்கு இந்த அரிசியில் கஞ்சி வைத்து பயன்படுத்தக் கூடிய பழக்கம் தமிழ் சமூகத்தில் இருக்கிறது. நார்சத்து உள்ளதால் குடல் புற்றுநோய் வருவதை தடுக்க உதவுகிறது.
Recommended Video

புற்றுநோயை தடுக்கும்
குழியடிச்சான் அல்லது குழிவெடிச்சான் என்றும் அழைக்கப்படுகிறது. வறட்சி காலத்திலும் குழியடிச்சான் நெல் வளரும். குழிநீரில் கொண்டு வளர்ந்து நெற்கதிர்கள் வருவதால் குழியடிச்சான் என அழைக்கப்படுகிறது. சம்பா பட்டத்திற்கு ஏற்ற மோட்டா ரகமாகும், சிகப்பு அரிசி. பயிர் வயது காலம் 90 முதல் 110 நாட்கள் ஆகும். பயிரின் உயரம் 3 முதல் 4 அடி வரை வளரக் கூடியதாகும். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications