இந்த வாரம் பாருங்க.. மன்னார்குடிக்கு குட் நியூஸ் சொன்ன டிஆர்பி ராஜா!.. நிஜமாவே மின்ன வச்சிடுவாரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடி மக்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் உதயம் ஆகக் கூடிய வாரமாக இந்த வாரம் அமையும் என முழுமனதோடு நம்புகிறேன் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி எம்எல்ஏவாக 3-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டவர் டிஆர்பி ராஜா. இவர் மின்னும் மன்னை என்ற திட்டத்தை செயல்படுத்த பாடுபட்டு வருகிறார். தற்போது திமுக ஆட்சி அமைந்த நிலையில் இந்தத் திட்டத்தை எப்பாடுப்பட்டாவது நிறைவேற்றுவேன் என துடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்க உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்கிறார்.

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்கள்

மன்னார்குடி டெல்டா மாவட்டங்களுள் முக்கியமான நகரமாகும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த மன்னார்குடி டெல்டா மாவட்டங்களில் 4ஆவது மிகப் பெரிய நகரமாகும். தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மன்னார்குடி உள்ளது. இந்த பகுதி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியுள்ளார்கள்.

சிறு குறு தொழில்கள்

சிறு குறு தொழில்கள்

தறி நெய்தல், உலோக தொழிற்சாலைகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. எனினும் இந்த நகரின் பெருவாரியான வருமானம் விவசாயத்தை முன்னிறுத்தியே உள்ளது. இங்கு நெல், பருத்தி, கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் விளைகின்றன. இங்கு பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லை. சிறு குறு தொழில்களே காணப்படுகின்றன.

மன்னை

மன்னை

இந்த நிலையில் நமது ஒன் இந்தியா தமிழுக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இன்னும் சில காலத்தில் (அதாவது பட்ஜெட் கூட்டத் தொடர்) மன்னார்குடிக்கு மகத்தான திட்டங்களை கொண்டு வருவோம். அந்த வகையில் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிக் கடனாக மன்னையை எப்படி மின்ன வைக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். இதை சவாலாகவே சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.

மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி

மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி

மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி, உணவுப் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் நாசுக்காக கேட்கிறார். இந்த நிலையில் விரைவில் மன்னார்குடிக்கு அற்புதமான திட்டங்கள் வரும் என ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், #மன்னார்குடி மக்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் உதயம் ஆகக்கூடிய வாரமாக இந்த வாரம் அமையும் என்று முழுமனதோடு நம்புகிறேன்.

நெட்டிசன்கள் கோரிக்கை

நெட்டிசன்கள் கோரிக்கை

கழகத் #தலைவர் #முதலமைச்சர் அவர்கள் நல்லாசியுடன் மன்னையின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் என்று நம்புவோம். நமது மன்னை நிச்சயம் மின்னும். #மின்னும்_மன்னை #DmkGovt என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராஜா. இந்த ட்வீட்டுக்கு பிறகு ராஜாவிடம் அந்த நகரை சேர்ந்த நெட்டிசன்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

குப்பை கிடங்கை ஒழிக்கணும்

குப்பை கிடங்கை ஒழிக்கணும்


அதில் ஒருவர் மன்னார்குடி மக்களை நோயாளிகளாக்கும் குப்பைக் கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும். மழைக் காலங்களில் வரும் துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்கில் குப்பைகளை எரிக்கும் போது வரும் புகையால் குப்பை கிடங்கு சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார். அது போல் நிறைய பேர் மின்னும் மன்னை திட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். மேலும் பலர் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+