ஆதாரம் இல்லாததால்தான் பேசல.. இப்போ உண்மை என்னனு பாருங்க.. புது வீடியோ பற்றி மனோவின் மனைவி பேட்டி!
சென்னை: பாடகர் மனோவின் மகன்களை, ஒரு கும்பல் தாக்கும் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, மனோவின் மனைவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எங்களிடம் ஆதாரம் இல்லாததால் தான் இதுவரை பேசவில்லை, என் மகன்களையும், என்னையும் அந்த கும்பல் தான் தாக்கியது, போலீஸ் வந்ததும் தப்பிவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் மதுரவாயலைச் சேர்ந்த நிதிஷ் (16) இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கிருபாகரனுக்குத் தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அந்த சிறுவர்கள் தரப்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தாக்குதல் நடத்திய 5 பேரில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹீர் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மனோவின் மகன்களான ரஃபீக் மற்றும் சாஹீர் ஆகியோர் வீட்டில் இல்லை என மனோ தரப்பில் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அவர்கள் இரண்டு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சூழலில் மனோவின் மனைவி ஜமீலா ஊடகத்தினரை சந்தித்து அண்மையில் பேட்டி அளித்திருந்தார். என் மகன்கள் குறித்து மீடியாவில் என்னென்னவோ செய்தி போட்டுவிட்டார்கள். இதனால் என் மகன்கள் பயந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. நானே அந்த கவலையில் இருக்கிறேன். எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும், எனது மகன்கள், அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. உண்மை தெரியாமல் அவதூறுகளை பரப்ப வேண்டாம் என மனோவின் மனைவி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் பாடகர் மனோவின் மகன்களான ஷகீர், ரபீக் ஆகியோரை 10க்கும் மேற்பட்டோர் கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் 4 டூவீலர்களில் வந்த 10க்கும் மேற்பட்டோர் மனோவின் இரு மகன்களை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு பாடகர் மனோ சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனோவின் மனைவி ஜமீலா மற்றும் மனோவின் மருமகள் ஆகியோர் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "எங்களிடம் ஆதாரம் இல்லாததால் தான் பேசவில்லை. இப்போது ஆதாரத்துடன் வந்திருக்கிறேன். எங்க பசங்க அடிச்சதாக வீடியோ வந்ததை வைத்து அவதூறாக எவ்வளவு சித்தரிக்க முடியுமோ செய்துவிட்டீர்கள். இப்போது உண்மை என்ன என்பதை பாருங்கள்.
10 பேர் வந்து அடித்தார்கள். போலீஸ் வந்ததால் 2 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சின்ன பசங்க வாழ்க்கை போய்விடும் என போலீசார் கூறினர். நானே என் பசங்களிடம் சொல்லி, வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அவர்களை விட்டுவிட்டோம். காலையில் அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைப்பதாக போலீசார் கூறினர். ஆனால் வரவில்லை. என் மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் என் கண் முன்னால் வரவில்லை என்றால் என்னால் தாங்க முடியாது. என்னை அடித்ததால் தான் அந்த பசங்களை என் மகன்கள் அடித்தனர்." எனத் தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications