எழும்பூர் கோர்ட்டில் காத்து கிடக்கும் மன்சூரலிகான்.. முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க முதல் நபராக வந்தார்
முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க கோர்ட்டுக்கு வந்திருக்கிறார் மன்சூர் அலிகான்
Recommended Video

சென்னை: எழும்பூர் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் முகிலன் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக தனது ஆதரவை தெரிவிக்க முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்து காத்து கிடக்கிறார் நடிகர் மன்சூரலிகான்.
கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தனது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கூறியதாகவும், கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான சில உண்மைகளை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிக்க உள்ளதாகவும் முகிலன் கூறியிருந்தார்.
இதற்காக மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முகிலனை எழும்பூர் கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தும்படி நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டிருந்தார். முகிலன் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாலும், இதையடுத்து முக்கிய திருப்பங்கள் நிகழ கூடும் என்பதாலும், கோர்ட் வளாகமே பரபரத்து காணப்படுகிறது.

கோர்ட்
இந்நிலையில், நடிகர் மன்சூரலிகான் எழும்பூர் கோர்ட்டுக்கு வந்துள்ளார். இவர் ஏற்கனவே பலமுறை முகிலனுக்காக குரல் கொடுத்தவர். "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய முகிலன் தற்போது உயிரோடு உள்ளாரா? இல்லையா என்பது கூட தெரியவில்லை.

முழு பொறுப்பு
தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிக்கு காணாமல் போன ஒருவரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் அல்ல... எனவே அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே பொறுப்பு" என்று ஒருமுறை ஆவேசமாக கூறினார் மன்சூரலிகான்.

பதில் சொல்லணும்
அது மட்டுமில்லை, முகிலன் கிடைக்கும் வரை தேர்தலை நடத்த விடமாட்டேன் என்றும், முகிலன் கடத்தப்பட்ட விவகாரத்திற்கு காவல் ஆணையர் முதல் சென்னை கமிஷனர் வரை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் உரக்க சொன்னவர் மன்சூரலிகான்.

எழும்பூர் கோர்ட்
இன்று முகிலன் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவதால், தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக காலையிலேயே கோர்ட்டுக்கு வந்து விட்டார் மன்சூர். ஏகப்பட்ட பரபரப்புக்கு மத்தியில், கோர்ட் வளாகத்தில் தாகத்துக்கு தண்ணீரை அருந்தி காத்து கிடக்கிறார் மன்சூர்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications