விஜய் அரசியல் கட்சி தொடங்குனா நான் ஓடிப்போய் பதுங்கிக்கணுமா? - மன்சூர் அலிகான் ஆவேசம்!
சென்னை: விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்பதற்காக நான் ஓடிப்போய் பதுங்கிக்கொள்ள வேண்டுமா? என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், 'தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வருகிறார். நேற்று குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். தான் நடத்தி வரும் தமிழ் தேசிய புலிகள் அமைப்பை, ஜனநாயக தேசிய புலிகள் என மாற்றுவதாக அறிவித்தார்.

அப்போது விஜய், அரசியல் கட்சி தொடங்க இருப்பது பற்றி மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் தம்பி நல்லா வரணும். விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்று பேச ஆரம்பித்த மன்சூர் அலிகான், அவர் அரசியலுக்கு வந்தால் நான் ஓடி போய் பதுங்கிக்கணுமா? என தனது பாணியில் காய்ச்சத் தொடங்கினார்.
மேலும், “விஜய் தற்போது “G.O.A.T" படத்தில் நடித்து வருகிறார் கோட்ன்னா ஆடு தானே.. பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்போம். நாளைக்கு அவர் கட்சி தொடங்குகிறார், இவர் கட்சி தொடங்குகிறார். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு பயமில்லை. எங்களுடைய கட்சியினுடைய கொள்கைகள் தான் முக்கியம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களுக்கு நடக்கும் அநீதி நிற்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரம், அவர்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும். நீட் தேர்வை நீக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இப்படி எங்களுடைய கட்சியின் கொள்கை விஷயத்தில் தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் மன்சூர் அலிகான்.
விஜய், மக்களவைத் தேர்தலை சந்திக்கும் பொருட்டு சென்னையை அடுத்துள்ள பனையூரில் தென் மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications