தொண்டாமுத்தூரில் தங்க வீடு கூட கொடுக்கவில்லை.. மன்சூருக்கு மக்கள் அளித்த வாக்குகள் எவ்வளவு?
சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளார்.
Recommended Video

சினிமாவில் காமெடி கலந்த வில்லத்தனம் செய்து வந்த மன்சூர் அலிகான், நிஜத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். சில தமிழ் அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்து வந்தார் மன்சூர்.ய
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டார். இதற்காக திண்டுக்கல் தொகுதியில் முகாமிட்ட மன்சூர் அலிகான் அங்கு எளிமையான வாழ்க்கையை நடத்தினார்.

பரோட்டா
அங்கு மீன் வெட்டி கொடுப்பது, பரோட்டா சுட்டு கொடுப்பது, குழந்தைகளை கொஞ்சி மகிழ்வது என இருந்த மன்சூர் அலிகான் தனது மனதில் பட்டதை படக்கென்று சொல்லிவிடுவார். மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைப்பார். இதனால் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அதை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை.

நாடாளுமன்றத் தேர்தல்
இந்த நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் இவர் 34,434 வாக்குகளை பெற்றார். அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தை பிடித்தது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீட் கிடைக்கும் என மன்சூர் அலிகான் எதிர்பார்த்திருந்தார்.

மக்களோடு மக்கள்
ஆனால் அவருக்கு சீமான் சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு மக்களோடு மக்களாக மன்சூர் அலிகான் பழகினார்.

201 வாக்குகள்
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இந்த தொகுதியில் 201 வாக்குகள் மட்டுமே பெற்றார். இது அவருக்கும் அவரது ஆதரவாலர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூரில் எங்கு தேடியும் தான் தங்குவதற்கு யாரும் வீடு கொடுக்கவில்லை என மன்சூர் அலிகான் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications