சேரிப் புயல் திருமா.. அம்பானி- அதானியை விட்டு வைக்காத மன்சூர் அலிகான்.. மீண்டும் பரபரப்பு அறிக்கை
சென்னை: நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்த நிலையில் த்ரிஷா குறித்து பாலியல் ரீதியாக ஒரு கருத்தை பேசியிருந்தார். இது பெரும் பிரச்சினையாக மாறியது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி ராஜா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்த நிலையில் அவரோ நான் மன்னிப்பு கேட்கும் ஜாதியா என்றெல்லாம் பேசினார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதை த்ரிஷாவும் ஏற்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது. இனி விவசாயிகள் நிலம் பறிக்கப்படாது. நிலக்கரி சுரங்கத்திற்கென நிலம் புதிதாக எடுக்கப்படாது. 1% N.L.C. மின்சாரம். தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 1018% கர்நாடகம் செலவழிக்கிறது. சர்வே ரிப்போர்ட்.. கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்ம்ம்......பி வழிகின்றன. தமிழக ஆறுகளின் அடி மட்ட மண் யாவும். கேரளா, கர்நாடகாவுக்கு டன், டன்னாய் லாரிகளில் விற்க்கப்படுகிறது. அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது.
தூத்துக்குடியில் 13 பேரை சுட்ட போலி...(லி) ஸார் கடவுள் தூக்கிலே போடும். காவிரி டெல்டா விவசாய மண் யாவும் மீற்கப்படும். நெடுவாசல் நிறைய சேரி மக்கள் போராடிக்கொண்டே இருக்க, அதானி துறைமுகங்களில், ஏர்போர்ட் வழியாக நித்தம் டன்டன்னாக தங்கமும், கோகனும் கடத்திவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்று உலகின் No 1. பணக்காரர்...அதானி, அம்பானி | நாம்... அம்பாளை கும்பிடும் ... வெறும் அம்பாநீ ..... உப்பு தின்றவன். தண்ணி குடிக்கனும். யாம் அனுப்பியது கடிதம் அல்ல. அறிக்கை!!
எமை ஆதரித்த யாவோரும் ... முதல் உதிர்த்த வார்த்தை மன்சூரலிகான் செய்த தவறு. எனவே இறையச்சத்தோடு வருந்த வேண்டும். முன்னுதாரணமாக திகழ.. வேண்டி. யாம் பத்திரிக்கைக்கு அனுப்பியது அறிக்கை. கடவுள் மனம் குளிர்ந்தது. 5 மாநிலத்தில் "கை" வெல்கிறது ஆறு மாதத்தில் "இ.ந்.தி.யா" வெல்கிறது.. Cast census மூலம் யாவோர்க்கும்.. வேலைவாய்ப்பு.. அழகிய கடவுளே பொதுச்சொத்தை அதானிக்கு விற்றவர்களை தண்டிப்பாயாக!. சேரிப் புயல் திருமா... ஆதித்தமிழன் சமூகநீதி நிலைநாட்டிய அயோத்திதாஸ பண்டிதர் புகழ் ஓங்குக .....பாம்பை.....? கண்டவனுக்கு மட்டுமல்ல... அனைவர்க்கும் தர்ஷனம் தருவாயாக...... அரோகரா! யாம் அனுப்பியது கடிதம் அல்ல! என்று இந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications