ரூ.12.82 கோடி ஆவணம், 1024 கிராம் தங்கம் பறிமுதல்.. மணல் குவாரிகள் ரெய்டு! அமலாக்க துறை பரபர விளக்கம்
சென்னை: மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத் துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல முக்கிய மணல் ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அன்று காலை தொடங்கிய ரெய்டு இரண்டு நாட்கள் வரை நீட்டித்தது. இதற்கிடையே இந்த ரெய்டு குறித்து அமலாக்க துறை விளக்கம் அளித்துள்ளது.

மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த இந்த சோதனையில் ரூ. 2.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ. 12.82 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 1024 கிராம் தங்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமலாக்க துறை தனது ட்விட்டரில், "தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது. எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ், நீர்வளத் துறை அதிகாரிகள் என பலரது வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் என மொத்தம் 34 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

மணல் கொள்ளை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 12.82 கோடி ரூபாய் இதில் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத ₹ 2.33 கோடி பணம், ₹56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications