சேலத்தில் தவெகவை.. சல்லி சல்லியாக நொறுக்கிய எடப்பாடி... திரும்பி பார்த்த திமுக.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் மாவட்டம் தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில் திமுக, பாமக, தவெக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சேலம் புறநகர் மாவட்டம், தாரமங்கலம் தெங்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில், அமமுக இளைஞர் அணி மாவட்ட செயலார் சிவக்குமார், அமமுக மாணவரணி மாவட்ட செயலாளர் சக்திவேல், அமமுக மாவட்ட துணை செயலாளர் சுதா அண்ணாமலை, பனங்காட்டூர் திமுக கிளை பிரதிநிதி ஜெயவேல், ஆரூர்பட்டி பாமக கிளை செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகோபி, தமிழக வெற்றிக்கழக தெசவிளக்கு கிளைத் தலைவர் பிரபு உள்பட அக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்றைய தினம் அக்கட்சிகளில் இருந்து விலகி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்...

vijay tvk tamilaga vetri kazhagam

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழக வெற்றிக்கழக தெசவிளக்கு கிளைத் தலைவர் பிரபு தலைமையில் பலர் அதிமுக கட்சியில் இணைந்து உள்ளனர். கிட்டத்தட்ட சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் இதனால் ஆடிப்போய் உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

தவெக மீது கவனம்

கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகம் மீது அதிமுக கண் வைத்துள்ளது. முக்கியமாக விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது ?அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி அதிமுக சார்பாக பெரிய சர்வே ஒன்று நடத்தப்பட்டு உள்ளதாம்.

எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், தனியாக ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் பல்ஸை அறிந்துகொள்கிறார். அந்த ஏஜென்சி மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் சர்வே எடுத்துப் பார்க்கிறார் மிதுன். தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் முதல்நாள் வரை மக்களின் மனநிலை மாறக்கூடியது. அதனால், கடைசி கட்டம் வரை க்கும் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது முக்கியம் என்பதாலேயே இந்த 3 மாதங்களுக்கு ஒருமுறை என்கிற கான்செப்டுக்குள் நுழைந்துள்ளார் அவர்.

சர்வே ரிசல்ட்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு ரிசல்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வே என்பது அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்புப் பற்றி எடுக்கப்படவில்லையாம். மாறாக, விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது ?அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி மட்டுமே இந்த சர்வே எடுக்கப்பட்டதாம். அந்த சர்வேயின் முடிவுகளில், சீமானின் நாம் தமிழர் கட்சியைப்போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

8-10 சதவிகித வாக்குகள்

இதற்காக 8 முதல் 10 சதவீத வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைக்கிறது. அதேசமயம், ஒரு இடத்தில் கூட வெற்றிக்கான வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. வட தமிழகத்தில் விஜய் போட்டியிட்டால் அவர் மட்டும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் விஜய்யை எதிர்த்து திமுகவும் அதிமுகவும் நேரடியாக வலிமையான வேட்பாளர்களை நிறுத்தினால் விஜய்யின் வெற்றிக் கேள்விக்குறியாகும். மாறாக, விஜய்யை எதித்து திமுகவிலும் அதிமுகவிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார்.

வட தமிழகம்

வட தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. சுருக்கமாக, விஜய்யை எதிர்த்து திமுக-அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கினால் விஜய் தோற்பார் ; அதே சமயம் அவரை எதிர்த்து பிரதான கட்சிகளின் தோழமைக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார். ஆக, த.வெ.க. தனித்துப் போட்டியிட்டால் விஜய்க்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தாக்கத்தை ஏற்படுத்தலாமே தவிர வெற்றி வாய்ப்பு என்பது மிகமிக குறைவு என்பதாகவே இருக்கிறது என்று அந்த சர்வே ரிசல்ட் சொல்கிறதாம். இந்த முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் மிதுன் காட்டியுள்ளார் என்கின்றனர் மிதுனின் நட்பு வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+