வீட்டில் சாதிப்பெருமை.. ரோட்டில் சாதிப்பெருமை.. நாங்குநேரி சம்பவத்திற்கு நெட்டிசன்களின் ரியாக்சன்
சென்னை: நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
திமுக மாணவரணியைச் சேர்ந்த தமிழ் கா. அமுதரசன் வெளியிட்டுள்ள பதிவில்,

"கல்யாணப் பத்திரிக்கை வைக்கும் போது .... நம்ம ஆளுகளா ? என கேட்பது
ஓ.... நீயும் நம்ம ஆளுங்களா என அங்கலாய்ப்பது....
ஜாதி மறுப்பு திருமணம் தான் ஆனா SC மட்டும் வேண்டாம்....
நீ என்னா அவனா , மாட்டுக்கறிலாம் சாப்புடுற.....
அம்பேத்கர் படம் வச்சிருந்த , நீ அந்த ஜாதின்னு நெனச்சேன்....
நான் முற்போக்கு தான் ஆனா ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க என எஸ்கேப் ஆவது...
அவன் / அவள் நம்ம ஆளுங்ளா ? பார்த்தா அப்படி தான் தெரியுது
முற்போக்கு வேடம் போடும் பலரும் ஜாதிய சிந்தனைகளோடு தான் திரிகிறார்கள்....
வழிந்தோடும் ரத்தத்திற்கு நாம் எல்லோரும் தான் பொறுப்பேற்க வேண்டும்...
ஜாதி அழகிய சொல் என்றால் அவனை நிற்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்
குடிபெருமை , ஆண்ட பெருமை பேசும் நாய்களை கழுவேற்ற வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக அனுதாபியான எஸ்கேபி கருணா வெளியிட்டிருந்த பதிவில்,
"வீட்டில் சாதிப்பெருமை.
ரோட்டில் சாதிப்பெருமை.
மேடைகளில், திரைப்படங்களில், பாடல்களில், நட்பு வட்டாரங்களில் என எங்கெங்கும் சாதிப் பெருமையையே கேட்டு வளர்ந்த அந்தப் பசங்களுக்கு சமத்துவம் என்பது ஏட்டில் கூட மண்டையில் ஏறாது.
சிறைக்குப் போய் வருபவர்களை ஹீரோவாக பார்த்துப் பழகியவர்களுக்கு சிறை அச்சமும் இருக்காது.
அரிவாள், ரத்தம் எல்லாம் ஆண்மையின் அடையாளமாக புரிதல் கொண்ட புத்திக்கு உயிர் அச்சமும் இருக்காது.
16, 17 வயதில் சிறார் குற்றவாளிகளாக சிறைக்குப் போகும் இவர்கள் ஆறேழு ஆண்டுகளில் வெளியில் வரும்போது, இந்தச் சாதியச் சமூகத்துக்கு மேலும் விஷம் கூட்டுபவர்களாக வரவே சாத்தியம் அதிகம்.
தாக்கப்பட்டச் சிறுவனையும், அவன் தங்கையையும் அரசு தத்தெடுத்து சென்னைக்கு கொண்டு வந்து தரமான படிப்பும், வாழ்க்கைச் சூழலையும் அமைத்துத் தந்திட வேண்டும். ஒருவகையில் இது மட்டுமே இவர்களுக்கு அளிக்கப்படும் சரியான நீதியும், விடுதலையும் ஆகும்.

பள்ளி நடைமுறைகளில் மிகத் தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை. மாணவர்களை தலைமுடியை வெட்டி வரச் சொல்லக் கூடிய உரிமை கூட பறிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் இனி அதிகம் எதிர்பார்க்கவும் முடியாது.
நடந்தது மிகப் பெரும் சமூகக் கொடுமை. இனி வலி மறைந்தாலும் இந்த வடு மறையாது." என்று கூறியுள்ளார்.
நடிகர் எஸ்வி சேகர் வெளியிட்டுள்ள பதிவில், "படிக்கும் பருவத்து மாணவர்களை
வெட்டிச் சாய்த்திருப்பதை காண ஒரு தந்தையாக உள்ளம்
கலங்குகிறது..!
... வெறுப்பை விதைத்து கனல் அணையாமல் காத்து வரும் அரசியலும் சினிமாவும் வெட்கப்பட வேண்டும்..!🙏 அனைவரும் மன நலன் பெற பிரார்திக்கின்றேன்." என்று கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications