மேஜர் வார்னிங்! இன்று அதிகனமழை வெளுக்க போகிறது.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்தது போல இன்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. அதன்பின் இரவில் தீவிரம் எடுத்த மழை, தற்போது அதிகாலையிலும் பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் அதிகாலையில் லேசான மழை பெய்து வருகிறது.

மழை
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எங்கெல்லாம் பெய்யும்
கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது போக தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

மழை நிலவரம்
திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் நாளை கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையு பெய்யும். கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

அதிகனமழை
நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாளும் இதே மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் 14ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் தீவிர கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.












Click it and Unblock the Notifications