"நான் டயர்டாய்ட்டேன்.. மன்னிச்சுருங்க.. போய்ட்டு வர்றேன்".. மாரிதாஸ் பெயரில் ஒரு திடீர் அறிக்கை!
மாரிதாஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு போய் விட்டார் என்று பார்த்தால், அவரைத் தொடர்ந்து நான் போறேன்.. வர மாட்டேன் என்று வடிவேலு பாணியில் தமிழருவி மணியன் போனார் என்று பார்த்தால் இப்போது அதே பாணியில் டயர்டாயிருக்கு போறேன் என்று மாரிதாஸும் கூறியுள்ளார்.
Recommended Video
உண்மையில் மாரிதாஸ் இப்படிச் சொன்னாரா என்பதும் குழப்பமாக உள்ளது. அவரது பெயரில் உள்ள பேஸ்புக்கில்தான் இப்படி ஒரு அறிவிப்பை போட்டுள்ளார். ஆனால் அவரது பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் எந்தத் தகவலையும் காணோம்.. எனவே நாளைக்கு வந்து அது நான் இல்லை.. அட்மின் போட்ட பதிவு என்று மறுப்பாரா என்றும் புரியவில்லை.
சரி முதலில் மாரிதாஸ் பெயரில் உலா வரும் அந்த பேஸ்புக் பதிவில் என்ன சொல்லியிருக்கிறார் என பார்ப்போம்.. வாங்க!

விவாதங்கள்
"அனைவருக்கும் வணக்கம், என்னைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அனைவருக்கும் நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எழுதும் காலம் தொட்டு இன்று வரை என்னோடு முழுமையாக நின்ற அனைவருக்கும் நிச்சயம் நான் கடமைப்பட்டுள்ளேன். சமீபத்தில் தலைவர் ரஜினி அவர்கள் கட்சி அறிவிப்பு இல்லை என்பதை அவர்களே உறுதியாக வெளியிட்ட பின் உருவாகியுள்ள விவாதங்களில் என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்க விரும்புகிறேன்.

வாக்குறுதிகள்
அதற்கு முன் மாற்று அரசியல் சார்ந்து நான் உருவாக்கிய , உங்களுக்குக் கொடுத்த நம்பிக்கைக்கு , வாக்குறுதிகளுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் இறைவன் மீது ஆணையாக உங்கள் எவரையும் ரஜினி சார் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றவோ இல்லை திசை திருப்பி நான் பெயர் எடுக்கவோ நினைத்தவன் அல்ல. ஆம் நான் ஒரு நம்பிக்கையை உங்களுக்குக் கொடுத்தேன் அது இன்று பொய் என விமர்சிக்கப்படுகிற நிலைக்கு நானே காரணம் என்பதால் நான் அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆட்சியாளர்கள்
அடுத்து நான் மாற்று அரசியலை இளைஞர்கள் ஆன்மீகம் , அறிவியல் இரண்டும் பிடித்துக் கொண்டு நகர்வதற்கு தக்க ஒரு நேர்மையான , நாணயமான ஆட்சியாளர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்தால் என்ன என்ன நன்மைகள் எந்தவிதமான நன்மைகள் ஒவ்வொரு துறையிலும் எதிர் பார்க்கலாம் என்று புள்ளி விவரங்களை ஆதாரங்களோடு முன் வைத்தேன். தவிர அதில் ஏமாற்றும் எண்ணம் எனக்கில்லை. உண்மையாக 60 வருடம் மேல் இங்கே நடக்கும் வெறுப்பு அரசியலை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என்று நினைத்தேன்.

மனவேதனை
அதனால் அதற்கான முயற்சியை தீவிரமான எடுத்து முன்வைத்தேன். அதற்காக ரஜினி பெயரை பயன்படுத்திக் கொண்டேன் என்று சொல்வது மனதிற்கு வேதனையாக உள்ளது. எது எபப்டி என்றாலும் நான் ரஜினி முன் வைத்து செய்தது போல் உங்களுக்கு தோன்றி இருந்தால் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல்வாதி
அடுத்து எதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்று சிலர் கூறுவதில் இருக்கும் நியாயம் புரிகிறது ஆனால் "மாரிதாஸ் நேற்று ரஜினி எதிர்பார்த்தான் அவர் இல்லை என்றதும் அந்த கட்சிக்கு சென்று விட்டான்" அவனும் ஒரு சராசரி அரசியல்வாதி என்ற பேச இடம் கொடுக்க விருப்பம் இல்லை. ஆனால் தற்சமயம் அரசியல் எனக்கு வேண்டாம் அது என் நோக்கத்தை களங்கப்படுத்தும் தவிர உண்மையை உணர செய்யாது. இது பற்றி இந்த குழப்பமான நேரத்தில் இதை பற்றி முடிவெடுக்க வேண்டாம் என நினைக்கிறேன்.

முயற்சிப்பேன்
அடுத்து? நான் என் மட்டத்தில் என்ன முடியுமோ மாணவர்கள் இளைஞர்களுக்கு அதை ஆரோக்கியமான விசயங்களை எடுத்து சென்று சேர்க்க முயற்சிப்பேன். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியோ , நடிகைகள் பற்றியோ பேசி என் பக்கம் பார்வையாளர்களை கொண்டு வர முயற்சிக்க மாட்டேன். தேசத்திற்கு ஆரோக்கியமான விசயங்களை கொண்டு சேர்க்க என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன்.

அன்பு, மரியாதை
தலைவர் ரஜினி எடுத்த முடிவு தவறு கிடையாது. நம் தாய் தந்தையருக்கு என்றாலும் அதே தான் நாம் நினைப்போம் என்பதால் அதில் குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு நீடித்த உடல் நலமும் மன அமைதியும் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் மீது கொண்ட நம்பிக்கை , அன்பு, மரியாதை என்றும் மாறாது. நல்லது நடக்கும்.. நான் களைப்பாக உள்ளேன்;நான் முதல் முறையாக சோர்வாக உணர்கிறேன்.எனவே கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் களத்திற்கு வருவதும் வராமல் ஒதுங்குவதும் கடவுள் விருப்பம். நன்றி..-மாரிதாஸ்" ... இப்படி போகிறது அந்தப் பதிவு.

யார் இந்த மாரிதாஸ்?
ஆமாம் மாரிதாஸ் யார்.. ரொம்பப் பிரபலமான தலைவர் எல்லாம் கிடையாது.. வழக்கம் போல சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்கிடமான கருத்துக்களைப் போட்டு பிரபலமானவர்தான். பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து தன்னுடை யூடியூப் சேனல் வழியாக நிறைய பேசியுள்ளார். மீடியாக்களையும் விடவில்லை.. அதேசமயம் நிறைய அபத்தமாகவும் பேசக் கூடியவர் என்ற பெயரைப் பெற்றவர்.

அவதாரம்
சமீபகாலமாக திடீரென ரஜினி ரசிகராக அவதாரம் எடுத்தார். ரஜினிக்காக அப்படி கொடி பிடித்தார். தமிழருவி மணியன் உள்ளிட்டோரையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இவரது சத்தம்தான் அதிகமாகவும் இருந்தது.. சவுண்டு ஜாஸ்தி.. சரக்கு கம்மி என்று சொல்லும் அளவுக்கு அவரிடமிருந்து பலவீன கருத்துக்களே அதிகம் வெளியாகி வந்தன.

ரஜினிகாந்த்
யூடியூப்பில் ஏகப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு ரஜினிதான் அடுத்த முதல்வர் என்பதையும் வாய் வலிக்க சொல்லி வந்தவர் மாரிதாஸ்.. சில சமயங்களில் ரஜினியே சும்மா இருந்தாலும், உசுப்பேத்தும்படியான வீடியோக்களை வெளியிட்டு, ரஜினி ரசிகர்களை ஒருவித பரபரப்பிலும் எதிர்பார்ப்பிலும் வைத்திருந்தவரும்கூட... "ரஜினிகாந்த் கட்சி, கொடியை அறிமுகம் செய்த அடுத்த நிமிஷமே, தமிழ்நாட்டில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் அந்த கட்சியின் பெயரும் கொடியும் தானாகவே போய் சேர்ந்து விடும்... ரஜினியை ஆதரித்து பிரசாரமும் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று ஒருமுறை மாரிதாஸ் பகிரங்கமாக அறிவித்தும் இருந்தார்..

ஆச்சரியம்
ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல மாரிதாஸுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்து விட்டுப் போய் விட்டார் ரஜினிகாந்த். இதை மாரிதாஸ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை போல.. அப்படியே சைலன்ட்டாகி விட்டார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு, தமிழருவி மணியன் வீட்டுக்கு போய்விட்டார்.. அர்ஜுன மூர்த்தி மறுபடியும் பாஜகவுக்கே சென்றுவிடுவதாக சொல்கிறார்கள்.. இந்த வரிசையில் இப்போது மாரிதாசும் இணைகிறார்.. ஆனால் அவர் என்ன செய்வார்.. எங்கே போவார்.. எந்த அவதாரத்தில் அடுத்து நடமாடப் போகிறார்.. அதுதான் பெரிய ஆச்சரிய எதிர்பார்ப்பாக உள்ளது.!
-
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications