மாரிதாஸ் கைது.. பெரியாரின் முக்கிய கூற்றை நினைவுபடுத்தி அமீர் பரபரப்பு கருத்து.. சர்ச்சை!
சென்னை: மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீதான முதல் வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீக்கப்பட்டது குறித்தும் இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ், Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியது, இருப்பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் 3 முறை கைது செய்யப்பட்டார்.
இதில் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய முதல் வழக்கில் இருந்து மாரிதாஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் மாரிதாஸ் மீதான முதல் வழக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து இயக்குனர் அமீர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் விழா ஒன்றில் பேசிய அமீர், தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அரசியல் கலாச்சாரம் சிறப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. அம்மா உணவகம், அம்மா பெட்ரோல் போன்று முந்தைய அரசில் நிறைய திட்டங்கள் வந்தன.

திட்டங்கள்
அந்த திட்டங்கள் தற்போது அதே பெயரில் இயங்குகிறது. இது மிகப்பெரிய அரசியல் மாற்றம். திமுக ஆட்சியில் அந்த பெயர்கள் மாற்றப்படவில்லை. அதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை விழா ஒன்றில் முதல்வர் மேடைக்கு அழைத்து அமர வைத்தார். இதெல்லாம் மிகப்பெரிய அரசியல் நாகரீகம். மாரிதாஸ் கைது சரியான முடிவுதான்.

மாரிதாஸ்
ஆனால் அவர் முதல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனக்கு பெரியார் சொன்னதுதான் நியாபகம் வருகிறது. நாம் எல்லாம் படித்து, பெரிய ஆள் ஆகி, உயர்ந்த பதவிக்கு வரும் நேரத்தில், சட்டம் இயற்ற கூடிய இடத்தில் ஆரியர்கள் அமர்ந்து இருப்பார்கள் என்று பெரியார் கூறினார். அது இப்போது அப்படியே உறுதியாகி உள்ளது.

நீதிபதி
மாரிதாஸ் மீது குற்றம் இல்லை என்றால் கண்டிப்பாக அவரை விடுவிக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு நீதிபதியே மாரிதாஸுக்கு வழக்கறிஞர் போல செயல்பட்டது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் மாரிதாஸே தான் போட்ட ட்வீட் தவறு என்று தெரிந்து அதை நீக்கி உள்ளார். நாம் நீதிமன்றத்தில் தோல்வி அடைகிறோம்.

தோல்வி
எப்படிப்பட்ட போராட்டத்தை நாம் நடத்தினாலும் கடைசியில் நீதிமன்றத்தில் தோல்வி அடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆரியர்களின் கையில்தான் இந்த தேசம் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது, என்று இயக்குனர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications