யாரை சந்திக்கச் சென்றாலும் வெறுங்கையுடன் செல்லாத மாரிமுத்து! பவானியிலிருந்து வந்த ஸ்பெஷல் பொருள்!
சென்னை: இயக்குநர், சக நடிகர்கள் உட்பட யாரை சந்திக்கச் சென்றாலும் வெறுங்கையுடன் செல்லாத பழக்கம் கொண்டவர் மறைந்த நடிகர் மாரிமுத்து.
யாரை சந்திக்கச் சென்றாலும் அவர்களுக்கு புத்தகமும், பொன்னாடையும் பரிசளிப்பது நடிகர் மாரிமுத்துவின் வழக்கம். ஆரம்பகாலங்களில் இருந்த வறுமை சூழலிலும் இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றியவர் நடிகர் மாரிமுத்து. இதற்காகவே கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி தனது வீட்டு அலமாறிகளை நிரப்பி வைத்திருப்பார்.

அதேபோல் வெறுமனே அந்த புத்தகத்தை கையில் எடுத்துச் சென்று கொடுக்காமல் அதற்கென பிரத்யேக கிஃப்ட் காகிதப் பை ஒன்றையும் சொந்தமாக தனது பெயர் அச்சடித்து வாங்கி வைத்துக் கொள்வார் நடிகர் மாரிமுத்து. சுற்றுச்சூழலை பாதிக்காத இந்த காகித கிஃப்ட் பையை ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்று ஆர்டர் கொடுப்பார்.
இப்படி வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து. அதேபோல் புத்தகங்களோடு பொன்னாடையையும் கூடவே வாங்கிச் சென்று போர்த்தி தாம் பார்க்கச் சென்றவர்களை கவுரவிப்பார்.
அதேபோல் மூட் அவுட் ஆகிவிட்டால் வடிவேலு காமெடியை பார்த்து தன்னை புத்துணர்வு செய்துக் கொள்வார் நடிகர் மாரிமுத்து. நடிகர்களிலேயே வடிவேலுவுக்கு மட்டும் தான் மாரிமுத்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications