பளிச்சுனு சுத்தமாகப் போகுது.. மெரினா, பெசன்ட் நகர் பீச்.. சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் தினமும் 2 வேளை இயந்திரங்கள் மூலம் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பிரதானப் பகுதியாக சென்னை உள்ளது. மாநகராட்சியின் பிரதான பிரச்னையாக இருப்பது குப்பை மேலாண்மைதான்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை விதிமுறைகளை மீறி கொட்டுவோர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாகப் பின்பற்றாதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாகவே அபராதம் விதிக்கும் செயல்பாடு அமலில் இருந்து வந்தது. அந்த அபராதத் தொகை தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி வீசப்படும் குப்பை மற்றும் வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் ரூ. 500 இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளையும் தூய்மைப்படுத்தும் வகையில், தினந்தோறும் 2 வேளைகள் இயந்திரம் மூலமாக மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக மெரினா கடற்கரை விளங்குகிறது. சென்னைக்கு வருகை புரியும் வெளிமாவட்ட, வெளிமாநில மக்கள் செல்லும் பிரதான பகுதியாக இருப்பது மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைதான். கடற்கரைக்குச் செல்லாமல் எந்தவொரு பயணிகளும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதில்லை.
பிரம்மாண்டத்துக்குப் பெயர்பெற்ற கடற்கரையான சென்னை மெரினா கடற்கரைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட, மாநில, வெளிநாட்டினரும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரைக்கு தினமும் குறைந்தபட்மாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். பண்டிகைக் காலங்கள், விடுமுறை தின நாட்களில் ஒரு லட்சம் பேருக்கும் மேல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதேபோல, பொதுமக்கள் மத்தியில் அதிகம் விரும்பும் பகுதியாக பெசன்ட் நகர் கடற்கரை விளங்குகிறது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்களின் வருகைக்கு ஏற்பட சிற்றுண்டி கடைகள், உணவகங்களின் எண்ணிக்கையும் 1500 க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், கடற்கரையில் அதிக அளவிலான குப்பைகளும் பொதுமக்களால் போடப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் ஆகிய இரண்டு கடற்கரைகளிலும் குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் 7 நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் தினமும் காலை நேரத்தில் மட்டுமே குப்பைகளை அகற்றி வருகின்றன. மாலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பதால் சென்னை கடற்கரைகள் குப்பைக் கூளமாக காட்சியளித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளின் தூய்மையை உறுதி செய்யும் வகையில், கடற்கரைகளில் இயந்திரங்களின் மூலமாக நாள்தோறும் இரண்டு முறை குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, பொதுமக்கள் உணவுக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடும் வகையில், மீன் உள்ளிட்ட விலங்குகளின் உருவத்தில் குப்பைத் தொட்டிகளை கூடுதலாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
Marina Rope Car: சென்னை மக்களின் கனவாச்சே.. மெரினா ரோப் கார் திட்டத்தை கைவிட முடிவா? போச்சு! -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications