சென்னையின் முக்கிய இடம்.. களமிறக்கப்பட்ட 300 ஏஐ கேமரா! உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு மண்டலம்!
சென்னை: தொடர் பணிகளுக்கு பின்பாக சென்னை காவல்துறை, மெரினா கடற்கரை பகுதியை உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு மண்டலமாக மாற்றி வருகிறது. அங்கு சுமார் 300 AI-திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ முடிவு செய்து பாதி பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் மீதம் உள்ள இடங்களிலும் கேமராக்கள் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேபர் சிலை முதல் சீனிவாசபுரம் வரை உள்ள 71 முக்கிய இடங்களில் இந்த கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படவுள்ளது. இதில் 280 4K அல்ட்ரா HD கேமராக்களும், முகம் மற்றும் வாகன அங்கீகார வசதியுடன் கூடிய 20 PTZ அலகுகளும் அடங்கும்.

மெரினா காவல் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு சிறிய கட்டுப்பாட்டு மையம், இந்த நேரடி காட்சிகளை வேப்பேரியில் உள்ள ICCC-க்கு அனுப்பும். ICCC என்பது ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
இந்த முயற்சி பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதோடு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு அங்கே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும், திருட்டு சம்பவங்களை தடுக்கும். அதோடு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தடுக்கப்படும். சமீபத்தில்தான் மெரினா கடற்கரைடையின் ஒரு பகுதி blue flag அங்கீகாரம் பெற்றது. இதையடுத்து அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. . இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மற்ற கடற்கரைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இது ஊக்கமளித்துள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெரினா கடற்கரை நீச்சல் குளத்தை சுற்றி 30 ஏக்கர் பரப்பளவில் 40 மூங்கில் இருக்கைகள், 20 குடைகள், நான்கு கண்காணிப்பு கோபுரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய நான்கு குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், இரண்டு செல்ஃபி புள்ளிகள், கண்காணிப்புக்காக 20 கேமராக்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் 24 ஜோடி மூங்கில் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பல வசதிகளை மாநகராட்சி ஏற்கனவே உருவாக்கியுள்ளது. மேலும் 40 அடி அகலம் மற்றும் 30 அடி உயரம் கொண்ட மூங்கில் வளைவு, தியான இடம் (30 அடிx30 அடி) மற்றும் வாசிப்பு இடம் (16 அடிx16 அடி), 30 சக்கர நாற்காலிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தூய்மை பணிகள்
மெரினா கடற்கரையின் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை உப்ராசர் நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இப்பணி அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 2.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பணியாளர்கள் கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
இப்பணியில் ஈடுபடும் 70 ஊழியர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பணியாற்றுவார்கள். அதே போல், மீதமுள்ள 30 பேர் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள். மணற்பரப்பை சுத்தம் செய்ய டிராக்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெரினா கடற்கரையை சுத்தமாகவும், குப்பைகள் இல்லாமலும் பராமரிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீலக்கொடி கடற்கரை
இது போக சென்னை மாநகராட்சி திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரையை நீலக்கொடி கடற்கரைகளாக மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் ஒவ்வொரு கடற்கரையிலும் 10-20 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை பயன்படுத்துதல் (TN-SHORE) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை இந்த திட்டத்திற்கான பகுதியை தேர்ந்தெடுக்கும்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications