என் கேர்ள் பிரெண்ட் தனலட்சுமிகிட்ட போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்க! ஜாமீன் கேட்டு மெரினா போதை நபர் மனு
சென்னை: சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பெண் தோழியுடன் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் என்பவர் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சந்திரமோகன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையினர் தன்னையும், தன் மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னுடைய தோழியிடம் தவறாக நடந்து கொண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனலட்சுமியும் நேற்றைய தினம் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன்னுடன் இருந்த ஆண் நண்பர் சந்திரமோகன் தான் காவல்துறையுடன் தகராறு செய்ததாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் இது தொடர்பாக மன்னிப்பு கோரியிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கெளரவமான குடும்ப பின்னணியை கொண்டவர் என்றும் காவல்துறை தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, ஜாமீன் கோரிய நபரும் அவரின் ஆண் நண்பரும் கைது செய்து 3 நாட்கள் தான் ஆகி இருப்பதாகவும், வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications