எம்ஜிஆரின் நிழல்.. கோடி கோடியாய் கொட்டிக் கிடக்கு! மீண்டும் அரசியலுக்கு வந்த ஜேப்பியாரின் குடும்பம்!
சென்னை: புரட்சித்தலைவர் என அழைக்கப்படும் எம்ஜிஆர் அரசியலில் இருந்தபோது அவரது வலதுகரமாக இருந்தவர் ஜேப்பியார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அரசியலை விட்டு அவர் விலகி 35 ஆண்டுகள் கடந்து விட்டது. ஜேப்பியார் மறைந்து விட்ட நிலையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு அவரது குடும்பம் மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறது. ஜேப்பியார்-ன் மருமகனான மரிய வில்சன் தான் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். ஜேப்பியார் யார்? மரிய வில்சன் யார்? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
நேற்று தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண் ராஜ் இணைந்தார். அவருடன் அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் நீதிபதி உள்ளிட்டோரும் இணைத்தனர்.
குறிப்பாக ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த மரிய வில்சன் இணைந்தார். அவர் தான் தற்போது அந்த கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருக்கிறார். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவினரால் மாவீரன் என அழைக்கப்பட்ட ஜேப்பியார்-ன் மருமகன் தான் இந்த மரிய வில்சன்.

கன்னியாகுமரியை சேர்ந்த ஜேப்பியார், எம்ஜிஆரின் வெறித்தனமான ரசிகராக இருந்தார். காவல்துறை வேலையை விட்டுவிட்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் மிகத் தீவிரமாக இயங்கியவர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது உறுப்பினர் படிவத்தில் இரண்டாவதாக கையெழுத்திட்டவர். எம்ஜிஆரின் நிழல் போலவே இருந்தவர். எம்ஜிஆர் வெறியன் என்றே அறியப்பட்டவர். தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் எங்கு சென்றாலும் அவர் உடன் ஜேப்பியார் நிச்சயம் இருப்பார்.
அதேபோல அதிரடியான செயல்பாடுகள் ஆவேச பேச்சு, தல அரசியல் என மின்னல் வேகத்தில் பணியாற்றியவர். அவரது விசுவாசத்தையும், கட்சிக்கு வேலை செய்யும் வேகத்தையும் பார்த்து எம்ஜிஆர் குடிநீர் வாரிய தலைவர், சட்ட மேலவை கொறடா, மீன்வள மேம்பாட்டு கழக தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வழங்கினார். மறைவுக்குப் பிறகு ஜானகி அணையில் இணைந்த அவர் 1989 தேர்தலில் டி-நகரில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
அதற்கு பிறகு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். எம்ஜிஆரின் தாயின் பெயரான சத்தியபாமா என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்தார். 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் ஜேப்பியார். கல்வி தந்தையாக மட்டும் அல்லாமல் சினிமா தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் வலம் வந்தவர். இந்த நிலையில் தயாரிப்பு மறைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அரசியலை விட்டுச் சென்று 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகனான மரிய வில்சன் அரசியலில் குதித்து இருக்கிறார் ஜேப்பியார்.
கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அவர் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் மாணவர்கள் திறமையை வளர்க்கும் வகையில் டிசைன் திங்கிங் கிளப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். சென்னையில் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான மரிய வில்சன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்திருப்பது மிகப்பெரிய ஒரு ஆதரவு என்றே சொல்லலாம். கல்வி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் மரிய வில்சன் விஜய்க்கு உறுதுணையாக இருப்பாரா? ஜேப்பியார் போல விஜயின் வலதுகரமாக மரிய வில்சன் மாறுவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications