பெண் வக்கீல்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வாங்கி கட்டிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு (Markandey Katju), வழக்கு விசாரணையின் போது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்காக பெண் வக்கீல்கள் தன்னை பார்த்து கண் அடிப்பார்கள் என்று கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. உச்ச நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, மார்க்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்ட மார்க்கண்டேய கட்ஜு, நேற்று முன் தினம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

markandey-katju-issues-apology-over-controversial-wink-remark-after-backlash

எக்ஸ் பதிவை நீக்கிவிட்டார்

வழக்கு விசாரணையின் போது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்காக பெண் வக்கீல்கள் தன்னை பார்த்து கண் அடிப்பார்கள் என்று கட்ஜு பதிவிட்டு இருந்தார். மார்க்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. உச்ச நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, மார்க்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.

மேலும் மார்க்கண்டேய கட்ஜு தனது கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், உடனடியாக அந்த எக்ஸ் பதிவை கட்ஜூ நீக்கிவிட்டார். பின்னர் தனது பதிவுக்கு விளக்கம் தெரிவித்து கட்ஜூ வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

பெண் வழக்கறிஞர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெற என்னை பார்த்து கண் அடிப்பார்கள் எனக் கூறிய கருத்துக்குக் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஜோக் ஆகவே அதை நான் பதிவிட்டேன். உடனடியாக அந்த பதிவையும் நீக்கிவிட்டேன். எனினும், இந்த கருத்தை பல பெண் வழக்கறிஞர்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு மனதளதில் புண்பட்டுள்ளனர்.

எனவே, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 78 வயதாகவும் கட்ஜு, கடந்த 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். மார்க்கண்டேய கட்ஜு இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

காந்தியை விமர்சித்து வாங்கி கட்டியவர்

கடந்த 2015 ஆம் ஆண்டு கங்கனா ரனாவத்தை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். தனது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக மன்னிப்பும் கோரினார். அதே ஆண்டு, தேசப்பிதா மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் எனவும் இந்தியாவுக்கு பெரும் தீங்கிழைத்தார் எனவும் கூறி வாங்கி கட்டிக்கொண்டார்.

அதேபோல, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய கட்ஜு, குறைந்தது 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்றும் அவர்களை மதத்தின் பெயரால் எளிதாக ஏமாற்ற முடியும்" என பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில், பெண் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் விதமாக மார்க்கண்டேய கட்ஜு பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளும் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

மக்களின் நம்பிக்கையையும் சிதைக்கிறது

உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கூறுகையில், "இத்தகைய கருத்துக்கள் வெறும் புண்படுத்துவது மட்டுமல்ல. சட்டத்துறையில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம், நம்பகத்தன்மை, திறன், நேர்மை மற்றும் தொழில்முறை நிலைப்பாட்டின் மீதான தாக்குதலாகும். அரசியலைமைப்பு விதிகளை உறுதி செய்யும் உயரிய பொறுப்பில் இருந்த ஒருவர், பெண் வழக்கறிஞர்களின் கடின உழைப்பையும் தகுதியையும் சாதாரண பாலின பாகுபாட்டின் மூலம் அற்பமாகக் கருதுவது மிகவும் கவலையளிக்கிறது.

அவரது கருத்து பெண் வக்கீல்களை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நீதி அமைப்பின் பாரபட்சமற்ற தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையிலும் அமைந்துள்ளது" என்று தெரிவித்து இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+