நடுரோட்டில் மீட்டிங் போட்டுவிட்டு.. ஆம்புலன்ஸ் டிரைவருக்கு எடப்பாடி மிரட்டல்! மருது அழகுராஜ் சுளீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி நடுரோட்டில் மீட்டிங் போட்டு இருக்கிறார். அவர் தனியாக மேடை போட்டு பொதுக்கூட்டம் நடத்தவில்லை.. மக்கள் பயன்படுத்தும் சாலை வழியாக ஆம்புலன்ஸ் செல்ல கூடாது என்பதில் என்ன நியாயம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி எடப்பாடி பழனிசாமி சர்ச்சை

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது.

Edappadi Palaniswami AIADMK

எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் கொலைமிரட்டல்

எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு மருது அழகுராஜ்

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி நடுரோட்டில் மீட்டிங் போட்டு இருக்கிறார். அவர் தனியாக மேடை போட்டு பொதுக்கூட்டம் நடத்தவில்லை. அந்த சாலை வழியாக ஒன்று ஆம்புலன்ஸ் செல்லவில்லை. அவர் நடுரோட்டில் மீட்டிங் போட்டிருக்கிறார். அதன் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல கூடாது என்பதில் என்ன நியாயம். எடப்பாடி பழனிசாமி நடுரோட்டில் ஆம்புலன்ஸ் சென்றால்.. கொலை மிரட்டல் விடுக்கிறார்.

பாதிக்கப்பட்ட ஒருவரது அழைப்பின் பேரில் உதவி கோரியவரை அழைத்து வரச் செல்லும் போது ஆம்புலன்ஸில் டிரைவர் மட்டும் தான் செல்வார் .. அப்படியெனில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை எடப்பாடி நோயாளியாக்கி விடுவாரா.. எல்லா நேரமும் ஆம்புலன்சில் எப்படி நோயாளி இருப்பார்? நோயாளியை அழைக்க செல்கிறார் என்றால் ஆம்புலன்ஸில் யாரும் இருக்க மாட்டார்களே.. அப்படிப்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை எடப்பாடி நோயாளியாக்கி விடுவாரா..

இது ஆம்னிபஸ் கூரை மீது நின்று கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு எடப்பாடி விடுத்த அப்பட்டமான கொலை மிரட்டல் அல்லவா.. எடப்பாடி பழனிச்சாமி பேசுவதே சட்டப்படி தவறு.. அவர் எப்படி ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மிரட்டல் விடுக்கலாம்.. தமிழக அரசு எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டு்ம், என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+