வெடித்தது மோதல்.. பாஜக வேலையை காட்டிட்டாங்க.. வெளிப்படையாக உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் எடப்பாடிக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குத் தடைவிதிக்க, நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்: இதற்கிடையே தனியார் செய்தி சேனலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இது வழக்கமான ஒரு தீர்ப்பு.. வாடிக்கையான மற்றும் வேடிக்கையான ஒரு தீர்ப்பு தான்.. இதை நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான்.. எந்தவொரு கட்சியையும் நீதிமன்றம் வழிநடத்த முடியாது.. கட்சியின் தலைவரை நீதிமன்ற உத்தரவுகள் முடிவு செய்ய முடியாது. நாங்கள் அடுத்து மக்கள் மன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.
ஒரு கட்சியை நடத்தச் சட்ட விதிகளைக் காட்டிலும் நிதி தான் முக்கியம் என்றே இப்போது மக்கள் புகார் சொல்கிறார்கள்.. இந்த தீர்ப்பில் எங்களுக்குப் பின்னடைவு இல்லை. எப்போது எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக ஒரு பின்னடைவு ஏற்படுகிறதோ.. அப்போதெல்லாம் அவரை கைதூக்கிவிடும் வகையில் ஒரு நீதிமன்ற தீர்ப்பும் வந்துவிடுகிறது. கடந்த காலங்களில் பல முறை இதுபோல நடந்துள்ளது.
கடும் தாக்கு: மதுரையில் இவர்கள் நடத்தியதை மாநாடு என்கிறார்கள். அது ஒரு புளியோதரை திருவிழா.. கலை நிகழ்ச்சிகள் குத்தாட்டங்களை நடத்தினர். தலைமைப் பண்பு இல்லாத ஒருவர் தன்னிடம் இருக்கும் நிதியை வைத்துக் கொண்டு கட்சியை அபகரித்ததை நியாயப்படுத்தும் மாநாடு தான் அது.. முற்றிலும் தோல்வி அடைந்த மாநாடு அது.. பெரும்பாலான தொண்டர்கள் அந்த மாநாட்டை நிராகரித்துவிட்டனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து மாநாடு நடத்தியுள்ளனர். அதை எடப்பாடி பழனிசாமியே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதுவே எதிர்க்கட்சியாக இருந்து இருந்தால் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என அனைத்தும் சென்றிருக்கும். ஆக, ஊழல் செய்வோர் தங்களுக்குப் பல்லாக்கு தூக்குவோராக இருந்தால் தங்களைப் பாதுகாப்போம் என்பதை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
பாஜக மீது அட்டாக்: மத்தியில் உள்ளவர்கள் எங்களுக்குக் கூட்டணிதான்.. பாஜக எங்களுடன் கூட்டணிக் கட்சியாக இருக்கிறார்கள்... அவர்கள் நாடு முழுக்க இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன செய்தார்களோ அதையே அதிமுகவில் செய்கிறது.. சந்திரபாபு நாயுடுவுக்கு கூட்டணியில் இருந்த போது என்ன செய்தார்கள். உத்தவ் தாக்கரேவுக்கு என்ன செய்தார்கள்..
தோளில் கை போட்டு கழுத்தை நெறிப்பார்கள்.. இப்போது அதிமுகவிலும் அதைத்தான் செய்கிறார்கள். கட்சியைப் பிளவுபடுத்தச் சகல வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். சட்டம், நீதி, தர்மம் என அனைத்தையும் தாண்டி கட்டுக்கட்டாக பணம் இருந்தால் போதும் அனைத்தையும் செய்யலாம் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
நீதிமன்ற தீர்ப்புகள்: பொன்முடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் தவறு செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ளது. ஒரு தீர்ப்பைப் படித்துவிட்டு தன்னால் 3 நாட்களுக்குத் தூங்கவே முடியவில்லை என்கிறார் சுப்ரீம் கோர்ட் நீதிபதி. எனவே, கீழமை நீதிமன்றங்கள் தவறு செய்கிறது என்பதை நாங்கள் சொல்லவில்லை.. சுப்ரீம் கோர்ட் சொன்ன கருத்து..
இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை குற்றச்சாட்டையே ஒருவர் முன்வைத்துள்ளார். இப்படி அரசியல் ரீதியாக இக்கட்டான நிலையில், பின்னடைவில் இருக்கும் போது அவருக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இது முதல்முறை இல்லை. ஒவ்வொரு முறை பின்னடைவைச் சந்திக்கும் போதும் அவருக்குச் சாதகமான தீர்ப்பு வருகிறது.
நாங்கள் ஒன்றை மட்டும் தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.. எங்களுக்கான தலைவரை என்றும் நீதிமன்றத்தால் முடிவு செய்ய முடியாது. மக்கள் அனைத்தையும் புரிந்தே வைத்துள்ளனர். அவர்களிடம் சென்று முறையிடுவோம். அவர்கள் சரியான முடிவைக் கொடுப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications