Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுங்கட்சி “மிதப்பு”.. கூட்டணியிலிருந்தே கலகக்குரல்! திருச்சி திமுக மோதலால் கொந்தளித்த மார்க்சிஸ்ட்

“ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள். திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.”

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஆளுங்கட்சி மிதப்பில் இதுபோன்று நடந்துகொள்ளும் நிர்வாகிகளை அரசு தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கிறார்.

நேற்று திருச்சி எஸ்பிஐ காலனியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய டென்னிஸ் அரங்கை திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பெயர் இல்லை.

இதனை கண்டு அதிருப்தி அடைந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் அவரையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் வலியுறுத்தி, அமைச்சர் நேருவின் காரை மறித்து கருப்பு கொடியை காட்டி அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திருச்சி சிவா வீடு

திருச்சி சிவா வீடு

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், விழா முடிந்து திருச்சி சிவாவின் வீடு வழியாக சென்றபோது அவரது வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். கே.என்.நேரு ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதலில் சிவாவின் வீட்டிற்குள் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடி, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

ஆதரவாளர்கள் கைது

ஆதரவாளர்கள் கைது

இதனை தொடர்ந்து திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்காக கே.என்.நேருவின் ஆதரவாளர்களும், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதற்காக திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் கே.என்.நேரு - திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

4 பேர் திமுகவில் இடைநீக்கம்

4 பேர் திமுகவில் இடைநீக்கம்

அப்போது அங்கிருந்த சாந்தி என்ற பெண் போலீஸுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக கே.என்.நேருவின் ஆதரவாளர் திருப்பதி கைது செய்யப்பட்டு உள்ளார். அத்துடன் நேருவுக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளர்களான காஜாமலை விஜய், துரைராஜ், முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகிய 4 பேர் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மார்க்சிஸ்டு கண்டனம்

மார்க்சிஸ்டு கண்டனம்

காவல் நிலையத்தில் சரணடைந்த அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். இந்த சம்பவம் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆளுங்கட்சி மிதப்பு

ஆளுங்கட்சி மிதப்பு

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது திருச்சியில்,
'திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அதை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளார்கள். இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது. அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள். திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும்

உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும்

காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது.‌ மேலும் கூடுதலாக... இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும். பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல் சட்டத்தின் கீழும் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+