Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“தூக்கிடுவேன்..” மிரட்டிய பாஜக நாராயணன்! ரயிலில் மோடி பற்றி பேசியது என்ன? சிபிஎம் நிர்வாகி பரபர

பிரதமர் நரேந்திர மோடியை ரயிலில் தவறாக பேசியவரை மன்னிப்பு கேட்க வைத்ததாக பாஜக நாராயணன் திருப்பதி வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என மார்க்சிஸ்ட் நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடியை தவறாக பேசியதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகியை மன்னிப்பு கேட்க வைத்ததாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தும் பேசிய வீடியோ வெளியிட்டு உள்ளார் மார்க்சிஸ்ட் நிர்வாகி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளரான சாமுவேல் ராஜ் இதுகுறித்து ட்விட்டரில், "அப்பாவியை தூக்கிவிடுவேன் என மிரட்டிய நாராயணன் திருப்பதியை எதிர்த்து தனியாக களம் கண்டேன்.

நீண்ட நேரம் பேசிய ஒரு வீடியோவை எடிட் செய்து மகிழ்ந்துள்ளார்.
யார் வென்றோம் என்பதல்ல பொது இடத்தில் பேசினால் எவராவது எதிர்பார்கள் என்ற செய்தி தான் முக்கியம்!" என்று பதிவிட்டு நடந்தது குறித்து விரிவாக பேசி வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

மிரட்டிய பாஜக நிர்வாகி

மிரட்டிய பாஜக நிர்வாகி

"காலை சென்னையில் இருந்து ஈரோடு செல்வதற்காக சதாபதி ரயிலில் வந்துகொண்டு இருந்தபோது என்னுடைய இருக்கைக்கு தொலைவில் இருந்து ஒருவர் மற்றொருவை மிரட்டும் சத்தம் கேட்டது. அங்கு பார்த்தால் பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி தன் அருகே பயணம் செய்தவரை மிரட்டினார்.

தூக்கிடுவேன்

தூக்கிடுவேன்

'நான் 2 நிமிடத்திலே நான் உன்னை தூக்கிவிடுவேன். நான் பாஜகவின் தலைவர். ரயில்வே வாரிய உறுப்பினர். நீ பிரதமரையே பேசுகிறாயா. நீ சாதி பிரச்சனையை கிளப்புகிறாய்.' என்று அந்த நபர் மிரட்டிக்கொண்டு இருந்தார். மிரட்டப்படும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2 நிமிடத்தில் தூக்கிவிடுவேன் என்றால் கொலை செய்வேன் என்றுதான் அர்த்தம்.

தட்டிக்கேட்டேன்

தட்டிக்கேட்டேன்

இதை சகிக்க முடியாமல் நான் என்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து சென்று அந்த நபரை பார்த்து ஏன் இவரை மிரட்டுகிறீர்கள்? 2 நிமிடத்தில் தூக்கிவிடுவேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் தெரியுமா? கொலை மிரட்டல் விடுகிறீர்கள். பிரதமரை பொது இடத்தில் பேசினால் இப்படிதான் நடக்கும் என்கிறார்.

அதானி, அம்பானிக்கே பிரதமர்

அதானி, அம்பானிக்கே பிரதமர்


ஏன் பிரதமரை பேசக்கூடாது? அவர் பொதுவாழ்க்கையில் இருப்பவர் தானே.. ஒரு கட்சியின் தலைவர்தானே. எனவே அவரது கொள்கைகளால் பாதிக்கப்படுகிறவர்கள் இப்படிதானே இருக்க முடியும். அதானி, அம்பானி ஆகியோருக்குதான் பிரதமர். எங்களை பொறுத்தவரை அவர் பிரதமர் என்கிற கடமையை நிறைவேற்றவில்லை. என்கிற ரீதியிலே நான் அரசியல் ரீதியான பிரச்சனைகளை எடுத்து வைத்தேன்.

தடித்த வார்த்தையில் பேசிய நாராயணன்

தடித்த வார்த்தையில் பேசிய நாராயணன்


அவர் தடித்த வார்த்தைகளை பேசும்போது நானும் பிரதமரை ஏன் அவ்வாறு பேசக்கூடாது என்கிற முறையில் கடுமையாக விமர்சித்தேன். இதுதான் நடந்தது. இது நடந்து சில நிமிடங்களில் காட்பாடியை நெருங்கிக்கொண்டிருக்கும் காரணத்தால் காட்பாடி ரயில் நிலையத்தில் இறக்கப்படுவீர்கள் என்று திடீரென அந்த பெட்டியின் ரயில்வே அதிகாரி குறிப்பிட்டார்.

ரயில் இறங்க சொன்ன காவலர்கள்

ரயில் இறங்க சொன்ன காவலர்கள்

காட்பாடி வந்தது. 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் ரயில் பெட்டியில் ஏறினார்கள். இவர்தான் என்று என்னை அவர் அடையாளம் காட்டினார். உடனடியாக உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்குங்கள் என்று அவர் கூறினார். நான் இறங்க மறுத்தேன். இவர் புகார் செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். புகார் செய்தவர் இறங்கினால்தான் நானும் இறங்க முடியும்.

வழக்குப்பதிவு செய்ய சொன்னேன்

வழக்குப்பதிவு செய்ய சொன்னேன்


ஒருவேளை புகார் செய்தவர் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் என்று நீங்கள் கருதினால் என்னை அடித்து நீங்கள் கீழே இறக்கலாமே தவிர நானாக இறங்க மாட்டேன் என்று சொன்னேன். ஒரு மனிதனை தூக்குவேன் என்று சொன்னதற்காக நானும் புகார் கொடுக்க வேண்டும். எனவே நான் இறங்க வேண்டிய ஈரோட்டில் இறங்குவேன். நான் கொடுத்த புகாரை வைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். அவரது புகாரை வைத்து என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். என்று நான் உறுதியாக தெரிவித்தேன்.

புறப்பட்ட ரயில்

புறப்பட்ட ரயில்

அதன் பிறகு காவலர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருந்தபோது ரயில் புறப்பட்டது. அடுத்து ஜோலார்பேட்டையில் இறங்க சொன்னார்கள். அப்போதும் மறுத்தேன். பல இடங்களில் இருந்து புகார் வருகிறது. என்ன செய்வது என்ற பதற்றத்துடன் காவல் அதிகாரிகள் அணுகியதை பார்க்க முடிந்தது. அவர்கள் செய்வதறியாது நின்றுகொண்டு இருந்தார்.

பேசித்தீர்க்க சொன்ன காவலர்

பேசித்தீர்க்க சொன்ன காவலர்

அதில் ஒரு காவல் அதிகாரி மட்டும் இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. பொது இடத்தில் பிரதமரை குறித்து பேசியதற்கு இருவரும் பேசி தீர்த்துக்கொண்டால் நாம் முடிவுக்கு வரலாம். எங்களுக்கு சிரமம் உள்ளது. என்று கேட்டுக்கொண்டார். அப்போது நான், அவர் ஒருவரை தூக்கிவிடுவேன் என்று சொன்ன ஆத்திரத்தில் பதிலுக்கு அதானி, அம்பானிக்குதானே பிரதமர் என்று விமர்சித்துவிட்டேன்.

தவறு என்று ஏற்றது ஏன்?

தவறு என்று ஏற்றது ஏன்?

பொதுக்கூட்டத்தில் பேசப்பட வேண்டிய இந்த செய்தியை ரயிலில் பேசியது தவறு என்று கருதினால் அதை தவறு என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒன்றும் இல்லை என்றுதான் குறிப்பிட்டேன். பாஜக இன்று தமிழ்நாட்டில் எத்தகைய பணியை மேற்கொள்கிறது. தனக்கு ஆதரவாக பாஜக காவல்துறையை பயன்படுத்துகிறது. நான் யார் என்று அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை தாக்கப்பட்டு இருக்கலாம் என்ற நிலையை பார்க்க முடிந்தது.

என் வாழ்நாள் தொழில்

என் வாழ்நாள் தொழில்

பாஜக, பிரதமரை பற்றி பேசுவதே ஏறக்குறைய எனது வாழ்நாள் தொழிலாக இருக்கிறது. நிச்சயமாக இந்த இந்துத்துவ எதிர்ப்பில் இருந்து, மக்களவை பிளவுபடுத்துகிற இந்த எதிர்ப்பில் இருந்து, மக்களுடைய வாழ்வாதாரங்களை, பொருளாதார வளங்களை சுரண்டுகிற இவர்களுக்கு எதிராக தொடர்ந்து முழங்குவோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அப்பாவிக்காக குரல் கொடுத்தேன்.

அப்பாவிக்காக குரல் கொடுத்தேன்.

காவலர்களை வைத்துக்கொண்டு அந்த நபர் மிக மோசமான முறையில் நடந்துகொண்டார் என்பதையும் ஒரு மிக சாதாரணமான பாதிக்கப்பட்ட பயணிக்காக இந்த பணியை நான் மேற்கொண்டேன். இத்தகைய அப்பாவிகளுக்காக நாம் தொடர்ச்சியாக இந்த களத்தில் இருப்போம். இன்னும் சொல்லப்போனால் நாம் தலையிட்டதால்தான் அந்த அப்பாவி திருப்பதி நாராயணனிடம் இருந்து பாதுகாக்கப்பட்டார். எப்போதும் இந்த மகத்தான மக்கள் பயணத்தில் மகிழ்ச்சியோடு தொடர்வேன்." என்று கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+