ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு... இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கறார்..!
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டுமெனில் அந்த ஆலையை தமிழக அரசே ஒட்டுமொத்தமாக கையிலெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இது மட்டுமல்லாமல் இன்னும் பல நிபந்தனைகளையும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது தமிழக அரசுக்கு விதித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு;
''ஆக்சிஜன் தேவையினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நிலையை கவனத்தில் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உள்ள அனைத்து வாய்ப்புகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.''
''அதையும் மீறி ஆக்சிஜன் தேவையை ஈடுசெய்ய ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் ஆலையை இயக்க வேண்டுமெனில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு மேற்கொள்ளலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.''
• ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஒட்டுமொத்தமாக கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
• அந்த ஆலையில் தாமிரம் உருக்கு உள்ளிட்ட எந்த உற்பத்தியையும் மேற்கொள்ளக் கூடாது. எக்காரணம் கொண்டு இங்கே தாமிரம் உற்பத்திக்கு அனுமதிக்க கூடாது.
•இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முன்னுரிமை அடிப்படையில் தமிழகம் பயன்படுத்திட வேண்டும்.
• ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம். இதை தவிர்த்து மாற்று வழிகளில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு முன்வரக் கூடாது.
• அரசு இந்த ஆலையை இயக்குவது என்கிற முடிவினை மேற்கொள்கிற போது தூத்துக்குடி மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். மக்களது ஒத்துழைப்பின்றி அரசு ஆலையை செயல்படுத்த முனைவது மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
• ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனம், சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனம், நீலகிரியில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம், இமாச்சலப் பிரதேசம் காசோலியில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென தமிழக அரசின் சார்பில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications