"விட்றாதீங்க அப்பா".. ஸ்டாலினின் சுளீர் ஆக்ஷன்.. பிஞ்சுகளை நாசம் செய்த 3 பேர்.. தட்டிதூக்கிய போலீஸ்
போக்சோவில் 3 கோவை ஆசிரியர்கள் கைதாகி உள்ளனர்
சென்னை: தமிழகத்தில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், பெண் பிஞ்சுகளை வேட்டையாடும் கயவர்களை போலீசார் அடுத்தடுத்து போக்சோவில் கைது செய்து அதிரடியை காட்டி வருகின்றனர்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது..
இதில், காவல்துறைக்கு முதல்வர் பிறப்பித்திருந்த உத்தரவும், அறிவுரையும் மிகவும் கவனிக்கத்தக்கது. அப்போது அவர் பேசும்போது, "சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் மட்டும், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

நம்பர் 1
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது... நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதித்து விடக்கூடாது.. பெண்பிள்ளைகள் மீதான தாக்குதல், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற மக்களை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும்சரி, உடனடியாக ஒடுக்க வேண்டும். "தமிழகம் நம்பர் 1" என்ற நிலையை அடைய வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை, உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்" என்று முதல்வர் பேசியிருந்தார்.

வன்முறை
இதற்கு பிறகு, நெல்லை என்கவுன்ட்டர் உட்பட சில அதிரடிகளை காவல்துறையினரும் எடுத்திருந்ததை மறுக்க முடியாது.. ஆனால், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இந்த நாடு சென்று கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.. கோவை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர்.. கோவையை சேர்ந்த ஒரு சிறுமிக்கு 16 வயது, அன்னூரை சேர்ந்த இன்னொரு சிறுமிக்கு 10 வயது, பொள்ளாச்சியை சேர்ந்த இன்னொரு சிறுமிக்கு 6 வயது..

ஆசிரியர்கள்
இதில் கொடுமை என்னவென்றால், இந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததே பாடம் சொல்லி தரும் பள்ளி ஆசிரியர்கள்தான்.. இவர்களில் இரண்டு ஆசிரியர்கள் பெயர் மணிமாறன், மற்றொரு ஆசிரியர் பெயர் எபினேசர்... இவர்கள் 3 பேரையுமே போக்சோவில் தட்டி தூக்கி உள்ளனர் நம் போலீசார்.. எனினும், கோவை மாவட்டமே அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.. பெற்றோர்கள் கதிகலங்கி போயுள்ளனர்.. சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது என்ற கேள்வி அவர்களை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது.

மாணவி தற்கொலை
இதே மாவட்டத்தில் சில மாதத்துக்கு முன்பு, ஆசிரியரின் டார்ச்சரால், ஒரு மாணவி தூக்கில் தொங்கியும்கூட, யார் மனதிலும் ஈரம் எழவில்லையா? சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஜெயிலில் அடைத்தும்கூட, இதுபோன்ற காமுக ஆசிரியர்களுக்கு பயம் வரவில்லையா? என்ற ஆச்சரிய கேள்வியும் பொதுமக்களிடம் எழுகிறது.

கனிமொழி
விருதுநகரில் உல்லாச வீடியோவை காட்டியே, தொடர்ந்து 6 மாதங்களாக 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.. மொத்தம் 8 பேராம்.. இவர்களில் 2 திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடான விஷயம்.. யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி முதல் குரல் எழுப்பி உள்ளது ஆறுதலான விஷயம்.. அதைவிட அந்த 8 பேர் மீதும் உடனடி நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.. எனினும், பெருகி வரும் பாலியல் தொல்லைகளுக்கு ஒரு தீர்வு தேவை என்ற கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

திமுகவினர்
முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நாளே, திமுகவினர் அம்மா உணவகத்தின் போர்டை உடைத்து நொறுக்கி அட்டகாசம் செய்த நிலையில், சொந்த கட்சி என்றும் பாராமல், தயவுதாட்சண்யம் பாராமல், ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை தமிழகம் மறக்காது.. போர்டை அடித்து நொறுக்கியவர்கள்மீதே நடவடிக்கை எடுக்கும்போது, பிஞ்சுகளை நாசம் செய்த கயவர்களுக்கு கடுமையான தண்டனையை தர வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக எழுந்துள்ளது..

கடுங்காவல்
போக்சோவில் கைதானால் 7 வருடம் கடுங்காவல் என்று தெரிந்தும்கூட, இந்த காமுகர்கள் எல்லாம் துணிகிறார்கள் என்றால், மறுபடியும் மறுபடியும் பயமின்றி பெண் குழந்தைகளை நாசம் செய்கிறார்கள் என்றால், போக்சோவைவிட கடுமையான சட்டம் வேண்டும் என்பதே இங்கு தேவையாக இருக்கிறது அர்த்தம்.. ஏற்கனவே கைதானவர்களுக்கு இன்னமும் தண்டனை கிடைக்காமல் உள்ளதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

விட்றாதீங்க அப்பா
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார்.. அதில், "அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. விட்றாதீங்க அப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது" என்று வேதனையுடன் கூறியிருந்தார்.. அந்த குரலின் வலிதான், முதல்வரின் இன்றைய தீவிர நடவடிக்கைக்கு காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. என்றாலும், தமிழகமெங்கும் இன்னமும் ஈனஸ்வரத்தில் அந்த குரல் கேட்கிறது "விட்றாதீங்க அப்பா..!
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications