சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இங்கே வாங்களேன்".. பழ.கருப்பையா பட்டென இப்படி முடிவெடுத்துட்டாரே.. உதயமானது இன்னொரு "கழகம்".. அடடே

பழ கருப்பையா புதிய கட்சியை துவங்கி உள்ளதுடன், அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் எம்எல்ஏவும், தமிழக அரசியலின் முக்கிய மற்றும் சீனியர் தலைவருமான பழ.கருப்பையா, புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்.. அதற்கான அறைகூவலையும் வீடியோ மூலம் விடுத்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவும், தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளருமான பழ. கருப்பையாவின் பேச்சு எப்போதுமே பலராலும் உற்றுகவனிக்கப்படும்.

சில வருடங்களுக்கு முன்பு, மாற்றத்தை உண்டுபண்ணுவதாக கூறி, மநீம இணைந்தார் பழ கருப்பையா.. அக்கட்சியின் ஆலோசகராகவும் பொறுப்பேற்றார்.. ஆனால், தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம படுதோல்வியை சந்தித்தது.

கலைஞரும் தமிழும் போல வாழுங்கள்..ஒபிஎஸ்-இபிஎஸ் போல வாழ்ந்து விடாதீர்கள்..மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ் கலைஞரும் தமிழும் போல வாழுங்கள்..ஒபிஎஸ்-இபிஎஸ் போல வாழ்ந்து விடாதீர்கள்..மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ்

பழ கருப்பையா

பழ கருப்பையா

இதன் காரணமாக அக்கட்சியில் இருந்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இனி அரசியல் வேண்டாம், மக்கள் பணி போதுமானது என்று அரசியலில் இருந்தே விலகிவிட்டதாக தகவல் ஒன்று வெளியானது... இதனால் அக்கட்சியில் சலசலப்பும் ஏற்பட்ட நிலையில், பழ.கருப்பையா, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக கூறியிருந்தார்.. சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில், "நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கிறீர்களா என்று தெரியவில்லையே?" என்று கேள்வி எழுப்பப்பட்டது..

மாறும் குதிரைகள்

மாறும் குதிரைகள்

இதற்கு பழ.கருப்பையா, "நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். கட்சியை விட்டு விலகிக்கொள்கிறேன்... நீங்கள் உங்கள் அரசியலை உங்கள் விருப்பப்படி, உங்களின் போக்குப்படி நடத்துங்கள். என்னுடைய மைதானம் விரிந்து பறந்தது... அதனால் உங்களை விட்டு விலகிச்செல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன்.. ஆனால், எந்த திருப்தியோ கோபமோ இல்லை.. என்னுடைய பயணம் மாறுபட்டதில்லை... என்னுடைய இலக்கும் மாறுபட்டதில்லை.. ஆனால் நான் ஏறுகின்ற குதிரைகள் வேறுபட்டிருக்கின்றன. அவ்வளவுதான்... இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை" என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்..

சுக்குநூறாக உடைந்தது

சுக்குநூறாக உடைந்தது

காங்கிரஸ், அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் இருந்தவர் பழ.கருப்பையா.. எனினும், அடிக்கடி கட்சி மாறும் அரசியல் தலைவர்களின் லிஸ்ட்டில் பழ.கருப்பையாவும் சேர்ந்துவிட்டதால், அவர் இப்போது எந்த கட்சிக்கு செல்வார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. சமீபத்தில், காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தி குறித்து புகழ்ந்து பேசியதால், எப்படியும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அனைத்துவிதமான கணிப்புகளையும் உடைத்து நொறுக்கி, புது கட்சியை துவங்கி அதிரடியை கூட்டி உள்ளார் பழ கருப்பையா.. "தமிழர் தன்னுரிமை கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை பழ.கருப்பையா தொடங்கி உள்ளார்..

பழ கருப்பையா நச்

பழ கருப்பையா நச்

"திராவிடத்தை காக்க, தமிழைக் காக்க, தமிழர் நலனை காக்க, சுரண்டல் அற்ற சமுதாயத்தை உருவாக்க சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள்" என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி என்பதன் மீதான தலைவர்களின் எதிர்மறை கருத்துக்கள் அதிகப்படியாக வெளிப்பட்டு கொண்டிருந்தது.. அப்போது பழ.கருப்பையாவும் இதே விவகாரம் குறித்து பேசியிருந்தார்..

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி

குன்னூரில் மதநல்லிணக்க விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, மிக முக்கியமான கேள்வி ஒன்றையும் பழ.கருப்பையா அப்போது எழுப்பியிருந்தார். "வேளாங்கண்ணி கிறிஸ்தவ கோயிலுக்கு செல்பவர்களும், நாகூர் ஆண்டவர் கோயிலுக்கு செல்பவர்களும் பெரும்பாலும் இந்துக்கள்தான்.. அவர்கள் கடவுள் வேறு, நம்முடைய கடவுள் வேறு என்று மக்கள் நம்புவதில்லை.. மக்களிடையே எந்த வேறுபாடுகளும் இல்லை, ஆனால் நாட்டை நடத்துபவர்களிடம் வேறுபாடு உண்டு..

பழ கருப்பையா அதிரடி

பழ கருப்பையா அதிரடி

அதனால்தான் மதநல்லிணக்க மாநாடுகளை நடத்தும் கட்டாயம் இப்படி ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற சிந்தனைகள் எல்லாம் சமீபகாலமாகவே அதிகமாக எழுந்துவருகின்றன.. ஒரே மொழி இந்தி,. ஒரே நாடு இந்து ராஷ்ட்ரியம்.. அப்படியானால், மற்றவர்கள் எல்லாம் எங்கே செல்வது?" என்று கேட்டிருந்தார் பழ.கருப்பையா... இந்த வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலான நிலையில், "திராவிடத்தை காக்க", பழ.கருப்பையா புதுக்கட்சியையே இப்போது துவங்கி உள்ளது, ஒட்டுமொத்த கட்சிகளின் கவனத்தையும் பெற்று வருகிறது.

English summary
Mass announcement and Senior leader pala karuppiah call to start a new part
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X