'மாஸ் தலைவர்' போட்டியிட தயாராக இல்லை.. அண்ணாமலையை மீண்டும் சாடிய காயத்ரி ரகுராம்!
சென்னை: அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டால் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் உங்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நான் நிற்கத் துணிந்தேன் ஆனால் நீங்கள் போட்டியிட தயாராக இல்லை. நான் சுயேச்சை, நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். ஆனாலும் என்னால் உங்களை வெல்ல முடியும் என்று காயத்ரி ரகுராம் மீண்டும் அண்ணாமலையை சீண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் டெய்சி சரண்- திருச்சி சூர்யா சிவா ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தினந்தோறும் பாஜக தலைவர் அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜக நிர்வாகிகள் காயத்ரி ரகுராமிற்கு பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.

அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட தயாரா?, அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன் என காயத்ரி சவால் விட்டிருந்தார். இப்படி தினம் தோறும் அண்ணாமலையை சாடி தனது ட்விட்டரில் காயத்ரி ராகுராம் பதிவிட்டு வருகிறர். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது.

திமுகவை வீழ்த்த பலமான கட்சி தேவை
நேரம், காலம் உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். திமுகவை வீழ்த்த பலமான கட்சி தேவை என்ற நிலையில், அதிமுகவே பெரிய கட்சி.. ஈரோட்டில் அதிமுகவினர் பலர் இதற்கு முன்பாக வெற்றி பெற்றுள்ளனர். போட்டியிடக்கூடிய வேட்பாளர் பண பலம் மற்றும் அதிகார பலத்தை முறியடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்" என்றார்.

உங்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் அண்ணாமலையை சாடி பதிவிட்டு இருக்கிறார். காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டால் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் உங்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நான் நிற்கத் துணிந்தேன். ஆனால் மிகப் பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் போட்டியிடத் தயாராக இல்லை.

என்னால் உங்களை வெல்ல முடியும்
உண்மை. என்னவென்றால், களத்தில் இருவருக்கும் பூத் கமிட்டி அல்லது பூத் முகவர் இல்லை, உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் - நான் சுயேச்சை, நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். ஆனாலும் என்னால் உங்களை வெல்ல முடியும்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் காயத்ரி ரகுராம் பதிவிட்ட மற்றொரு ட்விட்டில், "அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசிய பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள்.

பாஜக சிறிய கட்சியா?
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஓப்டிக்ஸ் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. சூசகமா இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி என்ன பயன்? நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளுக்கு பாஜக வெற்றி பெறும் எப்படி என்று வாக்குறுதி அளிப்பீர்கள்? அண்ணாமலை?" என்று சாடியிருந்தார்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications